Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரோடு அருகே ஒரே வாரத்தில் மூன்று அரசு பேரு‌ந்துகள் ஜப்தி!

ஈரோடு செ‌ய்‌தியாள‌ர் வேலு‌ச்சா‌மி!

Webdunia
புதன், 1 அக்டோபர் 2008 (11:45 IST)
ஈரோடு மாவட்டத்தில் ஒரே வாரத்தில் மூன்று அரசு பேரு‌ந்துகள் நீதிமன்றத்தால் ஜப்தி செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் சந்தியார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அய்யாசாமி. இவர் கடந்த 2003ஆம் ஆண்டு அரசு பேரு‌ந்து மோதி படுகாயம் அடைந்தார். இது குறித்து அரசு போக்குவரத்து கழகம் மீது பவானி விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொட‌ர்‌ந்தா‌ர் அ‌ய்யாசா‌‌மி. இதில் அய்யாசாமிக்கு ரூ.1 லட்சத்து 7 ஆயிரம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால் போக்குவரத்து கழகம் உரிய நஷ்டஈடு வழங்கவில்லை. இதை‌த் தொட‌ர்‌‌ந்து மீண்டும் நீதிமன்றத்தில் மனு தா‌க்க‌ல் செ‌ய்தா‌ர் அ‌ய்யாசா‌மி. வழக்கை விசாரித்த நீதிபதி மணிவேல், அய்யாசாமிக்கு வட்டியுடன் சேர்த்து நஷ்டஈடாக ரூ. 1 லட்சத்து 48 ஆயிரம் வழங்கவேண்டும் என உத்தரவிட்டார். குறிப்பிட்ட காலத்தில் இந்த தொகையும் கொடு‌க்காத காரணத்தால் அரசு பேரு‌ந்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டார் ‌நீ‌திப‌தி.

ஏற்கனவே இரண்டு அரசு பேரு‌ந்துக‌ள் ஜப்தி செய்யப்பட்ட நிலையில் ஒரே வாரத்தில் மொத்தம் மூன்று அரசு பேரு‌ந்துக‌ள் ஜப்தி செய்யப்பட்ட சம்பவம் ஈரோடு மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments