'' தற்போதுள்ள சந்தை விலையை கொடுத்து விவசாய நிலங்களை பொது மக்களிடம் இருந்து நேரிடையாகவே சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் வாங்க வேண்டும்'' என்று ம. த ி. ம ு. க பொதுச்செயலர் வைகோ கேட்டுக் கொண்டுள்ளார்.
webdunia photo
FILE
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு சிறுதொழில் மேம்பாட்டுக் கழகம் (சிப்காட்) தூத்துக்குடி மாநகரை ஒட்டியுள்ள தெற்கு வீரபாண்டியபுரம், சாமிநத்தம், மீளவிட்டான், சங்கரப்பேரி, சில்லாநத்தம் உள்ளிட்ட ஊராட்சிப் பகுதிகளில் ஏக்கர் ரூ.25 லட்சம் மதிப்புள்ள விவசாய நிலங்களை ரூ.80 ஆயிரத்துக்கு வாங்கி "ஸ்டெர்லைட்' போன்ற தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்து வருகிறது.
சந்தை மதிப்பான ரூ.25 லட்சம் கொடுத்து, பொதுமக்களிடம் இருந்து நேரிடையாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களே வாங்க வேண்டும். இதனை வலியுறுத்தி செப்டம்பர் 9 ஆம் தேதி முதல் சிப்காட் அலுவலகத்தின் முன்பு பொதுமக்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
விவசாயிகளை வஞ்சிக்கும் சிப்காட் நிர்வாகத்தைக் கண்டித்து நடந்து வரும் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ம. த ி. ம ு.க. வும் பங்கேற்கும ்'' என்று வைகோ கூறியுள்ளார்.