Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அறைக்குள் வை‌த்து மாணவ‌னவை பூ‌ட்டி‌ச் செ‌‌ன்ற ஆ‌சி‌ரிய‌ர்: பெற்றோர்கள் முற்றுகை!

ஈரோடு செ‌ய்‌தியாள‌ர் வேலு‌‌ச்சா‌மி!

Webdunia
சனி, 20 செப்டம்பர் 2008 (10:16 IST)
ஈரோடு அருகே பள்ளி அறைக்குள் மாணவனை வைத்து பூட்டி சென்ற சம்பவத்தால் அப்பள்ளியை பெற்றோர்கள் முற்றுகையிட்டனர்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ளது செட்டியாம்பாளையம். இப்பகுதியை சேர்ந்த வெங்கடேஷ், அமிர்தவள்ளி ஆகியோரின் மகன் ரங்கநாதன் (8). அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று முன்தினம் வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற மாணவன் ரங்கநாதன் வீட ு திரும்பவில்லை.

இதுகுறித ்து ரங்கநாதனின் நண்பர்கள் வீட்டில் பெற்றோர்கள் விசாரித்தும் பயன்இல்லை. மாணவனை காணவில்லை என்ற தகவலால் அப்பகுதி பெற்றோர்கள் அனைவரும் பீதியடைந்தனர். பல்வேறு பகுதியில் தேடிக்கொண்டிருந்தபோது பள்ளி வகுப்பறையில் மாணவன் அழும் சத்தம் கேட்டது.

உடனே பெற்றோர்கள் அங்கு சென்று பார்த்தபோது மாணவன் ரங்கநாதன் வகுப்பறையில் அழுதுகொண்டிருந்தான். உடனே அருகில் உள்ள வீட்டில் கொடுக்கப்பட்ட பள்ளியின் சாவியை பெற்று வகுப்பை திறந்து மாணவன் ரங்கநாதடன மீட்டனர்.

இது குறித்து பள்ளி ஆசிரியர்களிடம் பெற்றோர்கள் விசாரித்தனர். மாணவன் ரங்கநாதன் உடல்நலமின்றி இருந்ததாகவும் அதனால் மாத்திரை கொடுத்து படுக்கவைத்து அவன் த ூங்கிவிட்டதால் மறந்து சென்றுவிட்டதாகவும் ஆசிரியர்கள் கூறினர்.

இதனால் பெற்றோர்கள் கடுப்பாகி பள்ளியை முற்றுகையிட்டனர். தகவல் தெரிந்ததும் கோபி தாசில்தார் அன்பு மற்றும் கல்வி அதிகாரிகள் பள்ளிக்கு வந்து பெற்றோர்களிடம் பேசி சமாதானம் செய்ததால் முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐஃபோனை திரும்ப தந்த முருகன்.. ஏலத்தில் எடுத்த பக்தர்! - அமைச்சர் சேகர்பாபு தகவல்!

பொங்கல் தொகுப்பில் ரூ.1000 இல்லை.. ஆத்திரத்தில் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..!

கண நேரத்தில் காணாமல் போன வீடுகள்! லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ! - எலான் மஸ்க் பகிர்ந்த வீடியோ!

திடீர் ட்விஸ்ட்.. சீமான் வீட்டை முற்றுகையிட முயன்ற பெரியாரிய இயக்கத்தினர் கைது!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.. பிரச்சாரத்திற்கு தயாராகும் திமுக நிர்வாகிகள்..!

Show comments