Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாக்குபையில் குழந்தையை கடத்திய வாலிபர் கைது!

ஈரோடு செ‌ய்‌தியாள‌ர் வேலு‌ச்சா‌மி!

Webdunia
சனி, 20 செப்டம்பர் 2008 (09:45 IST)
ஈரோட்டில் விளையாடிக ் கொண்டிருந்த குழந்தைகளை சாக்குபையில் அடைத்து கடந்த முயன்ற வாலிபரை பொதுமக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

ஈரோடு சஞ்சய்நகர் ராஜா வீதியை சேர்ந்த பாபு, ராணி என்ற தம்பதியினருக்கு கார்த்தி (4), ஆகாஷ் (2) என்ற குழந்தைகள் உள்ளனர். பாபு உணவு விடுதியில் பணியாற்றுகிறார். ராணி கட்டட பணிக்கு செல்கிறார். அதே பகுதியை சேர்ந்த மூர்த்தி, சங்கீதா தம்பதியினருக்கு பூவரசன் (8), பிரியா (3) என்ற குழந்தைகள் உள்ளனர்.

இ‌ந்த குழ‌ந்தைக‌ள் விளையாடிக் கொண்டிருந்தபோது அந்த பகுதியில் ஒரு வாலிபர் சாக்குபையில் பழைய காகிதங்களை சேகரித்தவாறு குழந்தைகளிடம் வந்தார்.

குழந்தைகள் பிரியா மற்றும் ஆகாஷ் ஆகியோரை தனியாக அழைத்து சென்று பிரியாவை சாக்குபையில் அடைத்தார். இதை பார்த்த அப்பகுதி மக்கள் அந்த வாலிபரை பிடித்து சாக்குபையில் இருந்த பிரியாவை மீட்டனர். ‌ பி‌ன்ன‌ர் அ‌ந்த வா‌லியரை அடி‌த்து உதை‌த்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

பிடிபட்ட வாலிபர் பெயர் குமார் (30) எ‌ன்று‌ம் இவர் ஈரோடு அருகே உள்ள பள்ளிபாளையத்தை சேர்ந்தவர் எ‌ன்று‌ம் தெரியவந்தது. மேலும் இவரிடம் விசாரணை நடக்கின்றது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது நடவடிக்கை எடுக்க திமுக புகார்..!

திருப்பதி நெரிசலில் சிக்கி பலியான தமிழக பெண் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம்: முதல்வர் ஸ்டாலின்

பனையூரில் நாளை தமிழக வெற்றி கழக கூட்டம்.. மாவட்ட தலைவர்களுக்கு அழைப்பு..!

பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி திடீரென நிறுத்தி வைப்பு.. பொதுமக்கள் அதிருப்தி..!

திருப்பதியில் பலியானவர்கள் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு: ஆந்திர அரசு அறிவிப்பு

Show comments