Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரை, நெல்லைக்கு சிறப்பு ரயில்க‌‌ள்: தெ‌ன்னக ரயில்வே அறிவி‌ப்பு!

Webdunia
வெள்ளி, 19 செப்டம்பர் 2008 (10:26 IST)
பயணிகளின் கூட்டநெரிசலை சமா‌ளி‌ப்பத‌ற்காக, சென்னையில் இருந்து மதுரை, நெல்லைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக த ெ‌ ன்ன க ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில ், " திருச்சியில் இருந்து சென்னைக்கு 21ஆ‌ம ் தேதி இய‌க்க‌ப்படு‌ம ் சிறப்பு ரயில் (வ.எண். 0653) திருச்சியில் இருந்து இரவு 8.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.15 மணிக்கு எழும்பூரை வந்தடையும்.

மதுரையில் இருந்து சென்னைக்கு 21ஆ‌ம் தேதி இய‌க்க‌ப்படு‌ம ் சிறப்பு ரயில் (0632) மதுரையில் இருந்து இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.50 மணிக்கு எழும்பூரை வந்தடையும்.

மறுமார்க்கம், சென்னையில் இருந்து மதுரைக்கு வருகிற 23ஆ‌ம் தேதி இய‌க்க‌ப்படு‌ம ் சிறப்பு ரயில் (0631) எழும்பூரில் இருந்து இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 3.15 மணிக்கு மதுரையை சென்றடையும்.

இதேபோல், நெல்லையில் இருந்து சென்னைக்கு 20, 27ஆ‌ம் தேதிகளில் இய‌க்க‌ப்படு‌ம ் சிறப்பு ரயில் (0603) நெல்லையில் இருந்து இரவு 8.25 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.30 மணிக்கு சென்னையை வந்தடையும்.

மறுமார்க்கம், சென்னையில் இருந்து நெல்லைக்கு 21, 28ஆ‌ம் தேதிகளில் இய‌க்க‌ப்படு‌ம ் சிறப்பு ரயில் (0604) எழும்பூரில் இருந்து இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.15 மணிக்கு நெல்லையை சென்றடையும்.

சென்னையில் இருந்து நெல்லைக்கு 25ஆ‌ம் தேதி இய‌க்க‌ப்படு‌ம ் சிறப்பு ரயில் (0617) எழும்பூரில் இருந்து இரவு 8.25 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.30 மணிக்கு நெல்லையை சென்றடையும்.

மறுமார்க்கம், நெல்லையில் இருந்து சென்னைக்கு 26ஆ‌ம் தேதி இய‌க்க‌ப்படு‌ம ் சிறப்பு ரயில் (0618) நெல்லையில் இருந்து மதியம் 3 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு எழும்பூரை வந்தடையும்.

இந்த சிறப்பு ரயில், தாம்பரம், செங்கல்பட்டு, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சி ஆகிய ரயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்லும். நெல்லையில் இருந்து சென்னைக்கு வரும் சிறப்பு ரயில் மாம்பலத்தில் கூடுதலாக நின்று செல்லும்.

இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று (19ஆ‌ம் தே‌தி) முத‌ல ் தொடங்குகிறத ு" எ‌ன்ற ு கூறப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புகையில்லாத போகி பண்டிகை கொண்டாடுவோம்.. மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள்..!

தேர்தல் வந்தால் பொங்கல் பரிசுத்தொகை:சட்டமன்றத்தில் அமைச்சர் துரைமுருகன் பேச்சு..!

பெரியார் பேசியதற்கான ஆதாரத்தை வெளியிட தயார்: சீமான் பேச்சுகு அண்ணாமலை ஆதரவு!

பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது நடவடிக்கை எடுக்க திமுக புகார்..!

திருப்பதி நெரிசலில் சிக்கி பலியான தமிழக பெண் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம்: முதல்வர் ஸ்டாலின்

Show comments