ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, 50 ரூபாய்க்கு 10 மளிகைப் பொருட்கள் வழங்கும் திட்டம் நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு வரப்பட்ட திட்டம் என்று குற்றம் சாற்றியுள்ள அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா, ஏழை, எளிய, மக்கள் இந்த நாடகத்தை இனியும் நம்பத் தயாராக இல்லை என்றும் வெண்ணெய் எத ு? சுண்ணாம்பு எது? என்பது தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
webdunia photo
FILE
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில ், தமிழ்நாட்டில் அரிசிக்கடத்தல் அமோகமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறார். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை மனதில் வைத்து, மக்கள் மத்தியில் தனக்கு உள்ள அவப்பெயரை மறைக்க, கருணாநிதி ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி திட்டத்தை அறிவித்திருக்கிறார். மேற்படி ஒரு ரூபாய் அரிசி பழுப்பு நிறத்தில் இருப்பதாகவும், வண்டுகள் இருப்பதாகவும் பொதுமக்கள் பரவலாகக் குற்றம் சாட்டுகின்றனர்.
துணிக்கடைகளில், புடவை, வேட்டி போன்றவற்றில் ஏதாவது ஒரு சிறிய பழுது ஏற்பட்டிருந்தால் அதை குறைந்த விலைக்கு சலுகை விலையில் விற்பது வழக்கம். அந்த அடிப்படையில், கீழே கொட்ட வேண்டிய அரிசியை மக்களுக்கு குறைந்த விலைக்கு, 'ஆடி தள்ளுபடி' போல் 'தேர்தல் தள்ளுபடி'யாக கருணாநிதி கொடுக்கிறாரோ என்ற சந்தேகம், மக்கள் மத்தியில் தற்போது எழுந்துள்ளது.
2.10.2008 முதல் நியாய விலைக் கடைகளில் 10 வகையான மளிகைப் பொருட்கள், 50 ரூபாய்க்கு விற்கப்படும் என்று மேலும் ஒரு கவர்ச்சியான போலி அறிவிப்பை வெளியிட்டார். மேற்படி அறிவிப்பு நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்று. ஏனென்றால், 2002-ஆம் ஆண்டு டெல்டா மாவட்டங்கள் வறட்சியினால் கடுமையாக பாதிக்கப்பட்ட போது, அப்பகுதியிலுள்ள சுமார் 10 லட்சம் நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு தீபாவளிப் பரிசுப் பொருட்கள் அடங்கிய பைகள் எனது அரசால் விநியோகிக்கப்பட்டன.
அந்தப் பொருட்களை பொட்டலம் கட்டுவதற்கே மிகுந்த சிரமப்பட வேண்டியிருந்தது. பின்னர் அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களின் ஒத்துழைப்புடன் அந்தப் பணி வெற்றிகரமாக முடிக்கப்பட்டது. இது ஒரு நாள் நிகழ்ச்சி. தற்போது, அறிவித்துள்ளது ஒரு தொடர் திட்டம். இந்தத் திட்டத்தின்படி 1 கோடியே 86 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்காக, 1 கோடியே 86 லட்சம் பைகளில், தலா 10 பொட்டலங்கள் வீதம், மாதா மாதம் போடுவது என்பது நடைமுறையில் இயலாத காரியம்.
மேற்படி 50 ரூபாய்க்கான பொருட்களை வைத்து, மாதம் முழுவதும் ஒரு குடும்பத்தை நடத்திச் செல்ல முடியுமா என்பதை கருணாநிதி எண்ணிப் பார்க்க வேண்டும். 'விலைவாசி கட்டுப்படுத்தப்பட வில்லைய ா?' என்ற தலைப்பில் வீண் செலவு செய்து அரசு விளம்பரத்தை 12.9.2008 அன்று வெளியிட்டிருக்கிறார்.
அதில் 2007 ஆம் ஆண்டு சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் படி, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயில், கோதுமை, சர்க்கரை, கோதுமை மாவு, மைதா, ரவை போன்ற பொருட்கள், ஒரு கிலோ வீதம் நியாய விலைக் கடைகளின் மூலம் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறத ு. ஆனால் பல மாதங்கள் மேற்படி பொருட்கள் மக்களுக்கு வழங்கப்பட வில்லை.
வருகின்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை மனதில் வைத்து, இது போன்ற திட்டங்களை எல்லாம் அறிவித்து உள்ளார். சாதாரண ஏழை, எளிய, மக்கள் இந்த நாடகத்தை இனியும் நம்பத் தயாராக இல்லை. வெண்ணெய் எத ு? சுண்ணாம்பு எது? என்பது தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.