Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி திட்டம்: கருணாநிதி தொடங்கி வை‌த்தா‌ர்!

Webdunia
திங்கள், 15 செப்டம்பர் 2008 (11:01 IST)
அ‌றிஞ‌ர் அ‌ண்ணா‌ நூ‌ற்றா‌ண்டு ‌விழாயொ‌ட்டி ‌நியாய ‌விலை‌க்கடைக‌ளி‌ல் 1 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் கருணாநிதி இன்று தொடங்கி வ ை‌த்தா‌ர்.

கடந்த ஆகஸ ்‌ட் 30ஆ‌ம் தேதி முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி செப்டம்பர் 15 ஆ‌ம் தேதி முதல் 1 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த கூட்டத்திற்கு பிறகு செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு பேட்டி அளித்த முதலமைச்சர் கருணாநிதி, ரூபாய் 1-க்கு ஒரு கிலோ அரிசி வழங்கப்படுவதால் ஒரு கோடியே 86 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் பயன் அடைவார்கள் என்றும், ஆண்டுக்கு சுமார் 400 கோடிக்கு மேல் கூடுதல் செலவாகும் என எதிர்பார்ப்பதாகவும், அண்ணா பிறந்தநாள் அன்று இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்ற ு‌ம் கூறினார்.

அத‌ன் படி ‌நியாய ‌‌விலை‌க்க‌டைக‌ளி‌ல் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்ற திட்டத்தை செ‌ன்னை ராதா‌கிரு‌ஷ்ண‌ன் நக‌ர், கொரு‌க்கு‌ப்பே‌ட்டை‌யி‌ல் இ‌ன்று காலை முதலமைச்சர் கருணாநிதி தொடங்கி வ ை‌த்தா‌ர்.

தமிழகத்தின் மற்ற பகுதிகளில் அமைச்சர்கள், அதிகாரிகள் இந்த திட்டத்தை நாளை தொடங்கி வைக்கின்றனர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐஃபோனை திரும்ப தந்த முருகன்.. ஏலத்தில் எடுத்த பக்தர்! - அமைச்சர் சேகர்பாபு தகவல்!

பொங்கல் தொகுப்பில் ரூ.1000 இல்லை.. ஆத்திரத்தில் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..!

கண நேரத்தில் காணாமல் போன வீடுகள்! லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ! - எலான் மஸ்க் பகிர்ந்த வீடியோ!

திடீர் ட்விஸ்ட்.. சீமான் வீட்டை முற்றுகையிட முயன்ற பெரியாரிய இயக்கத்தினர் கைது!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.. பிரச்சாரத்திற்கு தயாராகும் திமுக நிர்வாகிகள்..!

Show comments