Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏழைகளு‌க்கும்‌ உயர்கல்‌வி அ‌ளி‌ப்பதே கு‌றி‌க்கோ‌ள்: கருணாநிதி!

Webdunia
ஞாயிறு, 14 செப்டம்பர் 2008 (16:22 IST)
வசதியில்லாதவர்களும் தொழில்கல்வி பயில வேண்டுமென்ற அக்கறையோடுதான் அரசு சார்பில் 7 புதிய கலைக்கல்லூரிகள், பொ‌றி‌யிய‌ல் க‌ல்‌லூ‌ரிக‌ள் தொட‌ங்க‌ப்ப‌ட்டு‌ள்ளன எ‌ன்ற ு முதலமை‌ச்ச‌ர ் கருணா‌நி‌த ி கூ‌றியு‌ள்ளா‌ர ்.

தமிழக அரசின் உயர் கல்வித் துறை வசதி படைத்தவர்களுக்கே வாழ் வ‌ளி‌க்‌கிறது. 2 ஆ‌ண்டு காலத்தில் அதிக கல்லூரிகள் தொடங்கப்படவில்லை எ‌ன்று‌ பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூ‌றிய கு‌ற்ற‌ச்சா‌ட்டு‌க்கு முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி ப‌தி‌ல் அ‌ளி‌த்து‌ள்ளா‌ர்.

இது கு‌றி‌த்து அவ‌ர் இ‌ன்று வெ‌‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌‌க்கை‌யி‌ல், " பொறியியல் கல்லூரிக்கான கட்டணம் தி.மு. க. ஆட்சி வருவதற்கு முன்பு மாணவர் ஒருவருக்கு ரூ.12,500 என்று இருந்ததை ரூ.7,500 என்று குறைத்தது வசதி படைத்தவர்களுக்குத்தான் என்று ராமதாஸ் சொல்லுகிறாரா எ‌ன்று கே‌ள்‌வி எழு‌ப்‌பியு‌ள்ளா‌ர்.

அரசு சார்பில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 7 புதிய கலைக்கல்லூரிகள் ஒரத்தநாடு, பெரம்பலூர், வால்பாறை, சுரண்டை, குளித்தலை, லால்குட ி, மேட்டூர் ஆகிய சிறிய ஊர்களில் தொடங்கப்பட்டுள் ளது.

இந்த ஆண்டு மட்டும் திண்டிவனம ், விழுப்புரம், பண்ணுருட்டி, திருக்குவளை, பெரம்பலூர், ரா மந ாதபுரம் ஆகிய சிறிய ஊர்களில் புதிய அரசு பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள் ளத ு. அதேபோ‌ல், அரசு சார்பில் 3 மருத்துவக் கல்லூரிகள் இந்த ஆண்டு மட்டும் தொடங்கப்படுகின்ற ன.

இவையெ‌ல்லா‌ம ் வசதி படைத்தோருக்காக செய்யப்படுகிற செ ய‌ல்களா, வசதியில்லாதவர்களும் தொழில்கல்வி பயில வேண்டுமென்ற அக்கறையோடு தான் அரசு சார்பில் இத்தனை கல்லூரிகள் தொடங்கப்படுகின்றன என்பதை டாக்டர் ராமதாஸ் புரிந்து கொள்ள வேண்டும ்.

தனியார் மருத்துவக் கல்லூரிகள், தனியார் பல் மருத்துவக் கல்லூரிகள் இரண்டும் மத்திய அரசின் கீழ், குறிப்பாக ம‌த்‌தி ய அமை‌ச்ச‌ர ் அ‌ன்ப ு ம‌ணி‌யி‌‌ன ் பொறுப்பிலே உள்ளவர்களால் அனுமதி அளிக்கப்படக் கூடியவையாகும். தனியாருக்குத் தரக்கூடாது என்பது அவர்களின் எண்ணமாக இருக்குமேயானால், அவர் அ‌ன்பும‌ணி‌யிடம ே கூறி அதனைத் தடுத்திருக்கலாம ்" எ‌ன்ற ு கருணா‌நி‌த ி கூ‌றியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments