Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌‌மிழக‌த்‌தி‌ல் எ‌ல்லா துறை‌யிலு‌ம் ஊழ‌ல்: வைகோ!

Webdunia
வெள்ளி, 12 செப்டம்பர் 2008 (14:21 IST)
'' தமிழகத்தில் எல்லா துறையிலும் ஊழல் மலிந்து விட்டத ு'' எ‌ன்று ம. த ி. ம ு. க பொது செயலர் வைகோ கு‌ற்ற‌ம் சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
கோவையில் அவ‌ர் செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு அ‌ளி‌த்த பே‌ட்டி‌யி‌ல், மதுரையில் அண்ணா நூற்றாண்டு விழா மற்றும் மண்டல மாநாடு 15ஆம் தேதி நடக்கிறது. இந்த மாநாடு தமிழக அரசியலில் ஒரு திருப்புமுனையையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தும்.

தமிழகத்தில் அனைத்து பிரிவினரையும் மின்வெட்டு பிரச்னை ஸ்தம்பிக்க வைத்துள்ளது. இது த ி. ம ு. க அரசின் நிர்வாகச் சீர்கேட்டை காட்டுகிறது.

மத்திய தொகுப்பில் இருந்து மின்சாரம் கிடைக்கும் என ஆற்காடு வீராசாமி முதலில் கூறினார். பின்னர், மத்திய அரசு மின்சாரம் வழங்கவில்லை என்கிறார். ஒவ்வொரு நாளும் ஒரு மாதிரி ஆற்காடு வீராசாமி பேசி வருகிறார்.

த‌மிழக‌த்‌தி‌‌ல் எல்லா துறையிலும் ஊழல் மலிந்து விட்டது. கடலூர் மாநாட்டுக்கு மின்சாரம் திருடப்பட்டுள்ளது. இதை நாங்கள் ஆவணங்களுடன் பதிவு செய்துள்ளோம்.

விலைவாசி உயர்வால் மத்திய, மாநில அரசுகள் மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது. இதையெல்லாம் மறைக்க, ஒரு ரூபாய்க்கு அரிசி என்று கூறுகின்றனர். ஏழைகளில் ஒருவர்கூட ஒரு ரூபாய் அரிசி திட்டத்தை ஆதரிக்கவில்லை எ‌ன்று வைகோ கூறினார்.

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments