Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌மி‌ன்வெ‌ட்டு‌க்கு எ‌ப்போது ‌தீ‌ர்வு ‌கிடை‌க்கு‌ம்: கருணா‌நி‌‌தி‌க்கு சர‌த்குமா‌ர் கே‌ள்‌வி!

Webdunia
செவ்வாய், 9 செப்டம்பர் 2008 (10:04 IST)
'' மின்வெட்டு, விலைவாசி உயர்வு உள்பட ப‌ல்வேறு பிரச்னைகளுக்கு எப்போது தீர்வு கிடைக்கும ்'' என்று முதல்வருக்கு சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

webdunia photoFILE
இது தொட‌ர்பாக அவ‌ர் வெ‌ளிய‌ி‌ட்டு‌ள்ள அ‌றி‌‌க்கை‌யி‌ல், '' மின்வெட்டு பற்றாக்குறை குறித்து ஒவ்வொரு நாளும் தான் காட்டும் அக்கறை பற்றி பகுதி நேர அரசியல்வாதிகளுக்கு தெரியாது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

கருணாநிதி எந்த அளவு அக்கறை காட்டி வருகிறார், நடவடிக்கை எடுக்கிறார், அதன் பலன் என்ன என்பது, லட்சக்கணக்கான மக்களின் வேலை இழப்பிலும், கிராமப்புறத்தில் அன்றாடம் மின் விளக்குகள் எரியாமல் மாணவ, மாணவியர் பாடம் படிக்க முடியாமல் திணறுவதிலும், பஞ்சாயத்து கிணற்று மோட்டார் பம்புகள் இயங்காமல் அதனால் தண்ணீர் வராமலும், சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள் மின்சாரத் தடையினால் மூடிவிட்டு அவதியுறுவதிலும் மக்கள் மிகத் தெளிவாக புரிந்துள்ளார்கள்.

மக்களுக்காக கட்சி தொடங்கியுள்ள என்னைப் போன்றவர்களை பகுதி நேர அரசியல்வாதியாக இருப்பதாக கூறும் கருணாநிதி, முழு நேர அரசியல் மற்றும் முதல்வர் பணியை செய்கிறாரா எனும் சந்தேகம் மக்கள் மனதில் உருவாகியுள்ளது.

சினிமா படங்களுக்கு வசனம் எழுதுவதும், கலைஞர் டி.வி.யில் இழை இழையாக நிகழ்ச்சி கவிதைபுனைதல், தொடர்ந்து கலைஞர் டி.வி.செல்லுதல், மேலும் தனக்கு வேண்டாத டிவியை ஒழித்து விடுவதற்கான முயற்சி ஆகியவற்றிற்கு செலவிடும் நேரம் போக மீதி நேரத்தில்தான் அரசுப் பணிகள் கவனிக்கப்படுகின்றன என்பது தமிழக மக்கள் அனைவருக்கும் தெரியும்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு குடும்பத்தைவிட மக்கள்தான் முக்கியம். ஆனால் குடும்பத்தை முன்னேற்ற, விதிமுறைகளை மீறி அரசு அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, நல்லாட்சியை பாதிக்கும் வகையில் தனது குடும்ப உறுப்பினர் ஒருவர் சட்டத்தை கையிலெடுத்து பொது நிர்வாகத்தை ஸ்தம்பிக்கச் செய்யும்போது கண்டுகொள்ளாமல் பதவியிலிருப்பது ஜனநாயக நாட்டில் பொறுத்துக் கொள்ளமுடியாத ஒன்று.

இதை சுட்டிக் காட்டும்போது திருத்திக்கொண்டு நிவர்த்தி செய்யப்படவேண்டும். அதுவன்றி எதிர்மறையான குற்றச்சாட்டுகளை புனைவது சரியல்ல. இதுவரை நாங்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கு பதில் ஏதும் அளிக்காமல், மக்கள் பிரச்னைகளை தீர்க்காமல் முதல்வர் தற்சமயம் கேள்விக்கு பதிலாக குற்றஞ்சாட்டினை இட்டுக்கட்டுவது சரியல்ல.

என்னவாயிற்று ஒகேனக்கல் பிரச்னை? என்ன செய்தீர்கள் நாங்குனேரி தொழில் பூங்கா? மின்வெட்டு எப்போது ரத்தாகும்? விலைவாசி எப்போது குறையும்? டீசல் தட்டுப்பாடின்றி கிடைக்குமா? சிமென்ட் விலை குறையுமா? தமிழக மீனவர்களுக்கு விடிவு காலம் எப்போது? இது போன்ற நூற்றுக்கணக்கான கேள்விகளுக்கு பதில் அறிய விரும்புகிறேன்.

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments