Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்.எல்.சி. ஒப்பந்த ஊழியர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்!

Webdunia
திங்கள், 8 செப்டம்பர் 2008 (12:25 IST)
தொடர் விபத்துகளை தடுக்கக்கோரி என ். எல ். சி ஒப்பந்த தொழிலாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நெ‌ய்வே‌லி என ். எல ். ச ி. யில் தொடர்ந்து நிகழும் விபத்துகளில் ஒப்பந்த தொழிலாளர்கள் பலியாகி வருகின்றனர். கடந்த 4ஆம் தேதி நடந்த விபத்தில் ஒப்பந்த தொழிலாளி கொள‌ஞ்‌சிய‌‌ப்ப‌ன் எ‌ன்பவ‌ர் இ றந்தார்.

அவரது குடும்பத்துக்கு இழப்பீடாக ரூ.10 லட்சம், உடனடி நிரந்தர வேலை, விபத்துக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3 நாட்களாக 2வது சுரங்கத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தன. நேற்று முன்தினம் சவப்பாடை ஊர்வலமும் நடந்தது. மருத்துவமனையில் உள்ள கொளஞ்சியப்பனின் உடலை வாங்காமல் அவரது குடும்பத்தினர் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். தொடரும் விபத்துகளை தடுத்து நிறுத்த வேண்டும். விபத்துகளில் இறந்த குடும்பத்துக்கு நிவாரண தொகையை வரையறை செய்ய வேண்டுமென வலியுறுத்தி இன்று காலை முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை என ். எல ். சி, ஏ.ஐ. ட ி. ய ு. சி, ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கம் நடத்துகிறது.

கடந்த சில மாதங்களாக பல்வேறு பிரச்னைகளால் மின்உற்பத்தி குறைந்து உள்ளது. ஒப்பந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் நீடித்தால் மேலும் மின்உற்பத்தி குறையும் அபாயம் ஏற்படும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5 பைசா குடுத்தா சிக்கன் பிரியாணி.. புதுக்கோட்டையில் புதுக்கடை! அலைமோதிய கூட்டம்!

க்ரீன்லாந்து, கனடாவை அடுத்து மெக்சிகோவுடன் மோதும் டிரம்ப்.. பெயரை மாற்ற இருப்பதாக அறிவிப்பு..!

கோவையில் ஏ.ஐ.,க்கான தொழில்நுட்ப பூங்கா: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

ஐஃபோனை திரும்ப தந்த முருகன்.. ஏலத்தில் எடுத்த பக்தர்! - அமைச்சர் சேகர்பாபு தகவல்!

பொங்கல் தொகுப்பில் ரூ.1000 இல்லை.. ஆத்திரத்தில் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..!

Show comments