Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செ‌ன்னை‌யி‌ல் ரூ.1000‌ கோடி‌யி‌ல் தேசிய கடல்சார் வளாகம்: டி.ஆர்.பாலு!

Webdunia
ஞாயிறு, 31 ஆகஸ்ட் 2008 (11:58 IST)
'' சென்னையில் நவீன வசதிகளுடன் ரூ.1,000 கோடி செலவில் தேசிய கடல்சார் வளாகம் அமைக்கப்படும ்'' என்று மத்திய அமை‌ச்ச‌ர் டி.ஆர்.பாலு கூறினார்.

webdunia photoFILE
சென்னையை அடுத்த உத்தண்டி கிராமத்தில் உள்ள தேசிய கடல்சார் கல்விக் கழக வளாகத்தில் புதிய விடுதி, பணிமனை மற்றும் விரிவுரை கூடங்களுக்கு மத்திய கப்பல், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமை‌ச்ச‌ர் டி.ஆர்.பாலு அடிக்கல் நாட்ட ினா‌ர். பேசுகை‌யி‌ல், இந்தியா மற்றும் உலகஅளவில் துறைமுக கொள்ளளவு, துறைமுகங்களில் ஏற்றுமதி, இறக்குமதி ஆகியவை அதிகரித்து வருகிறது.

எனவே கடல்சார் பணிகளுக்கு உலக அளவில் 3 ஆண்டுகளில் 27,000 அதிகாரிகள் பற்றாக்குறை ஏற்படும். அவ்வாறு பற்றாக்குறையை தடுக்க தற்போது திறமையான ஆட்களுக்கு பயிற்சி கொடுத்து தயார் செய்யும் பொறுப்பு நமக்கு உள்ளது.

இந்தியாவில் 139 கடல்சார் கல்வி நிறுவனங்கள் உள்ளது. அதில் 30 தமிழகத்தில் உள்ளது. இந்த ஆண்டு முதல் பிற்படுத்தப்பட்டோருக்கான 27 ‌ விழு‌க்காடு இடஒதுக்கீட்டை தேசிய கடல்சார் கல்விக்கழகத்தில் அறிமுகப்படுத்தியுள்ளோம். இங்கு 80 மாணவர்கள் படிக்கும் நிலை இருந்தது. இடஒதுக்கீட்டினால் 124 ஆக அது உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் விரைவில் இந்த கல்வி நிலையம் பல்கலைக்கழகமாக மாற இருக்கிறது.

அதற்காக ரூ.300 கோடி செலவில் தேசிய கடல்சார் பல்கலைக்கழகம் செம்மஞ்சேரியில் தொடங்கப்படும். அதுமட்டுமின்றி அதே வளாகத்தில் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் தேசிய கடல்சார் வளாகம் அமைக்கப்படும். அதில் ஓவிய அறை, மீன்கண்காட்சியகம், கடல்சார் உணவுப்பொருட்கள் விடுதி, ம ி ïசியம், கருத்தரங்கவளாகம் ஆகியவை அமைக்கப்படும். இது அரசு மற்றும் தனியார் முதலீட்டில் அமைக்கப்படும் எ‌ன்று டி.ஆ‌ர்.பாலு கூ‌றினா‌ர்.

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments