Webdunia - Bharat's app for daily news and videos

Install App

23,600 ‌நியாய‌விலை கடைகளு‌க்கு ந‌வீன ‌மி‌ன்னணு தராசுக‌ள்: த‌மிழக அரசு!

Webdunia
சனி, 30 ஆகஸ்ட் 2008 (12:39 IST)
அத்தியாவசியப் பொருள்களைச் சரியான எடையில் வழங்கி ட 23,600 நியாயவிலைக் கடைகளில் 8 கோடியே 50 லட்ச ரூப ா‌ய் செலவில் நவீன மின்னணுத் தராசுகள் நிறுவப்பட்டுள்ள ன'' எ‌ன தமிழக அரசு அற ி‌வி‌த்து‌ள்ளது.

இது தொட‌‌ர்பாக த‌மிழக அரசு வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌‌ப்‌பி‌ல், தமிழகத்தில் மொத்தம் 29,760 நியாய விலைக் கடைகள் உள்ளன. இவற்றுள் 6,160 நியாய விலைக் கடைகளில் ஏற்கனவே நவீன மின்னணுத் தராசுகள் படிப்படியாக நிறுவப்பட்டிருந்தன.

அந்நிலையில், பொதுமக்கள் நலன் கருதி, நவீன மின்னணுத் தராசுகள் நிறுவப்படாமல் நிலுவையில் இருந்த எஞ்சிய 23,600 நியாய விலைக் கடைகளிலும் நவீன மின்னணுத் தராசுகளை உடனடியாக நிறுவிட முதலமைச்சர் கருணா‌நி‌தியா‌ல் ஆணையிடப்பட்டது.

அந்த ஆணையின்படி, மொத்தம் 8 கோடியே 50 லட்சம் ரூப ா‌ய் செலவில் நவீன மின்னணுத் தராசுகள் கொள்முதல் ச ெ‌ய்ய‌ப ்பட்டு, 23,600 கூட்டுறவு நியாயவிலைக் கடைகளிலும் நிறுவப்பட்டுள்ளன.

இதன்மூலம் நவீன மின்னணுத் தராசுகள் இல்லாத நியாய விலைக் கடைகளே தமிழகத்தில் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளதென்றும், மேலும் அத்தியாவசியப் பொருள்களைப் பொதுமக்களுக்கு எடைகுறைவின்றி வழங்கிட வகை ச ெ‌ய ்யப்பட்டுள்ளது என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது நடவடிக்கை எடுக்க திமுக புகார்..!

திருப்பதி நெரிசலில் சிக்கி பலியான தமிழக பெண் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம்: முதல்வர் ஸ்டாலின்

பனையூரில் நாளை தமிழக வெற்றி கழக கூட்டம்.. மாவட்ட தலைவர்களுக்கு அழைப்பு..!

பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி திடீரென நிறுத்தி வைப்பு.. பொதுமக்கள் அதிருப்தி..!

திருப்பதியில் பலியானவர்கள் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு: ஆந்திர அரசு அறிவிப்பு

Show comments