Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொது சுத்திகரிப்பு நிலையம் செலவை அரசே ஏற்க வேண்டும்: சர‌த்குமா‌ர்!

Webdunia
செவ்வாய், 26 ஆகஸ்ட் 2008 (09:55 IST)
'' திருப்பூர் சாயப்பட்டறை கழிவுநீர் பொது சுத்திகரிப்பு நிலைய செலவை தமிழக அரசே ஏற்க வேண்டும ்'' என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.

webdunia photoFILE
இது தொட‌ர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்க ை‌யி‌ல், '' திருப்பூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் சாயப்பட்டறை கழிவுநீர் ஆற்றிலும், குடிநீரிலும் கலந்து விடுவதால், பொது மக்கள் அவ்வப்போது போராட்டம் நடத்துகிறார்கள்.

எனவே, திருப்பூரில் உள்ள 523 சாயத் தொழில் நிறுவனங்கள் சேர்ந்து 900 ஆயிரம் கோடி செலவில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைத்து வருகின்றன. இந்த மொத்த செலவையும் சாயத்தொழில் நிறுவனங்களே செலவழித்துள்ளன.

இதில், மத்திய, மாநில அரசுகளின் மானியம், வங்கிக் கடன் எவ்வளவு கிடைக்கும் என்று சாயப்பட்டறை நிறுவனங்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றன.

வடநாட்டு மற்றும் அய‌ல ்நாட்டு தொழில் நிறுவனங்களுக்கு தமிழக அரசு எத்தனையோ சலுகைகளை அளித்து வருகிறது. அதுபோல, பொதுசுத்திகரிப்பு நிலையத்திற்கு ஆகியுள்ள மொத்தச் செலவை மத்திய அரசின் உதவியுடன் தமிழக அரசே ஏற்க வேண்டும். ஆயிரக்கணக்கான சிறு சாயப்பட்டறைகளை இணைத்து ஆங்காங்கே சிறிய அளவிலான பொது சுத்திகரிப்பு நிலையங்களை தமிழக அரசே அமைத்திட வேண்டும்.

சாயத்தொழிலில் நமக்கு போட்டியாக இருக்கும் சீனா, வ‌ங்கதேச நாடுகளில் அந்நாட்டு அரசு அந்த நிறுவனங்களுக்கு பல சலுகைகள் வழங்கியுள்ளன. அதனால், அந்த நாடுகளோடு நாம் கடுமையாக போராட வேண்டியுள்ளது.

எனவே, இந்த பிரச்னையில் அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும். பொதுமக்கள், விவசாயிகள், பெரிய, சிறிய சாயப்பட்டறைகளின் நீண்டநாள் குறைகளை தீர்க்க சிறப்பு நிபுணர்கள் குழுவை அமைக்க வேண்டும ்'' எ‌ன்று சர‌த்குமா‌ர் கூ‌றியு‌ள்ளா‌ர்.

5 பைசா குடுத்தா சிக்கன் பிரியாணி.. புதுக்கோட்டையில் புதுக்கடை! அலைமோதிய கூட்டம்!

க்ரீன்லாந்து, கனடாவை அடுத்து மெக்சிகோவுடன் மோதும் டிரம்ப்.. பெயரை மாற்ற இருப்பதாக அறிவிப்பு..!

கோவையில் ஏ.ஐ.,க்கான தொழில்நுட்ப பூங்கா: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

ஐஃபோனை திரும்ப தந்த முருகன்.. ஏலத்தில் எடுத்த பக்தர்! - அமைச்சர் சேகர்பாபு தகவல்!

பொங்கல் தொகுப்பில் ரூ.1000 இல்லை.. ஆத்திரத்தில் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..!

Show comments