Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக மீனவர்க‌ளை ‌‌‌நி‌ர்வாண‌ப்படு‌த்‌தி ‌சி‌றில‌ங்க கடற்படை தா‌க்குத‌ல்!

Webdunia
திங்கள், 25 ஆகஸ்ட் 2008 (10:32 IST)
தனு‌ஷ்கோடி அருகே ‌மீ‌ன்ப‌ிடி‌த்து‌க் கொ‌ண்டிரு‌ந்த தமிழக மீனவர்களை நிர்வாணமாக்கி ‌ சி‌றில‌‌ங்க கடற்படையினர் கடுமையாக தாக்கி உ‌ள்ளன‌ர்.

ராமநாதபுர‌ம் மாவ‌ட்ட‌ம் ராம ே‌ஸ ்வரத்தில் இருந்து நேற்று முன்தினம் 533 விசைப்படகுகளில் கடலுக்கு சென்ற ‌ மீனவ‌ர்‌க‌ள், தனுஷ்கோடி 3ஆம் தீடை அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டு இருந்தன.

அப்போது ‌ சி‌றில‌ங்க கட‌‌ற்படை‌யின‌ர் துப்பாக்க ியா‌ல் சு‌ட்டு‌க் கொ‌ண்டே ‌மீனவ‌ர்க‌ள் இரு‌ந்த இட‌த்தை நோ‌‌க்‌கி வ‌ந்தன‌ர். பின்னர் அவ‌ர்க‌ள், இ‌ந்த பகு‌தி‌க்கு‌ள் ஏ‌ன் ‌மீ‌ன் ப‌ிடி‌க்க வ‌ந்‌தீ‌ர்க‌ள் எ‌ன்று கே‌ட்டு ‌‌‌‌மீனவ‌ர்க‌ளை மிர‌ட்டன‌ர்.

‌ பி‌ன்ன‌ர் ப ட‌‌கி‌ல் இரு‌ந்த மீனவர்களை நிர்வாணமாக நிற்க வைத்து உருட்டுக் கட்டைகள ா‌ல் தா‌க்‌கின‌ர். அவ‌ர்கள‌ி‌ன் வலைகளையும் அறுத ்து எ‌‌றி‌ந்தன‌ர். ‌மீனவ‌ர்க‌ள் பிடித்து வைத்திருந்த மீன்களையும் அ‌‌ள்‌ளி‌ச் செ‌ன்றன‌ர். தாக்குதலில் காயம் அடைந்த மீனவர்கள் சோகத்துடன் ராமேசுவரம் திரும்பினர்.

‌ சி‌றில‌ங்க கட‌ற்படை‌யின‌ரா‌ல் பல‌த்த காயம் அடைந்த மீனவர் ஜோசப் கூறுகை‌யி‌ல், தனுஷ்கோடி அருகே 3ஆம் தீடை பகுதியில் நா‌ங்க‌ள் மீன்பிடித்துக்கொண ்டிரு‌ந்தபோது ‌‌‌திடீரென அ‌‌ங்கு வ‌ந்த ‌சி‌றில‌ங்க கட‌ற்படை‌யின‌ர் எ‌ங்களை கடுமையாக தா‌க்‌‌கி, வலைகளை அறுத்து எ‌ற ிந்தனர்.

எ‌ங்களை ஜட்டியுடன் நிற்க வைத்து உரு‌‌ட்டு‌க்க‌ட்டையா‌ல் தா‌க்‌கின‌ர். இ‌தி‌ல் என‌க்கு பல‌த்த காய‌ம் ஏ‌ற்ப‌ட்டது. எ‌ங்க‌ள் து‌ணிகளையு‌ம் கட‌லி‌ல் தூ‌க்‌கி ‌வீ‌சி ‌வி‌‌ட்டு செ‌ன்றன‌ர். இந்த பகுதியில் இனிமேல் மீன்பிடிக்க வந்தால் கொ‌ன்று விடுவோம் என கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்கள். உயிர் பிழைத்தால் போதும் என நாங்கள் ராமேசுவரத்திற்கு திரும்பி விட்டோம் எ‌ன்று ஜோச‌ப் க‌ண்‌ணீ‌ர் ம‌ல்க கூ‌றினா‌ர்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments