Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌நில ஆ‌க்‌கிர‌மி‌ப்பை‌க் க‌‌ண்டி‌த்து திருவாரூரில் ஆர்ப்பாட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 24 ஆகஸ்ட் 2008 (14:53 IST)
மத்திய பல்கலைக்கழகம் அமைக்க திருவாரூர் மாவட் ட‌த்‌தி‌ல் ‌நில‌ம் ஆ‌க்‌கிர‌‌மி‌ப்பு செ‌ய்வதை‌க் க‌ண்டி‌த்து‌ம், அ‌ம ்முயற்சியை உடனடியாகக் கைவிட வலியுறுத்தியும் அ.இ.அ.‌ த ி. ம ு.க. சார்பில் வரு‌ம் 26ஆ‌ம் தே‌தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் எ‌ன்ற ு அ‌க்க‌ட்‌சி‌யி‌ன் பொதுச் செயலர் ஜெயலலிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் வெளியிட்டுள்ள அறிக்கையில ், " மத்திய பல்கலைக்கழகம் அமைக்க திருவாரூர் மாவட்டம்,கொரடாச்சேரி ஒன்றியம், பெரும்புகழுர், நீலக்குடி, தியாகராஜபுரம், பொம்மாநத்தம், கருணாகர நல்லூர ், வண்டாம்பாளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சுமார் 700 ஏக்கர் விவசாய விளை நிலங்களை ஏழை, எளிய மக்களிடமிருந்து அபகரிக்கும் முயற்சியில் தி.மு.க. அரசு ஈடுபட்டுள்ளது. மேற்படி நிலங்களில் ஆண்டுதோறும் இரண்டு போகம் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.

இ‌ந்த ‌நில ஆ‌க்‌கிர‌மி‌ப்பை‌க் கண்டித்தும், நில அபகரிப்பு முயற்சியை உடனடியாகக் கைவிட வலியுறுத்தியும், திருவாரூர் மாவட்ட அ.இ.அ.‌தி.மு.க. சார்பில், 26 ஆ‌ம் தேதி (செவ்வாய்க்கிழமை) திருவாரூர் தெற்கு வீதி, கோட்டாட்சியர் அலுவலகம் எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும ்" எ‌ன்று கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments