Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விசைத்தறி தொழிலாளர் பிரச்சினை: விஜயகாந்த் கோ‌ரிக்கை!

Webdunia
சனி, 23 ஆகஸ்ட் 2008 (10:16 IST)
கோவை மாவட்ட விசைத்தறி தொழிலாளர ்க‌ள ் பிரச்சின ை‌யி‌ல ் தமிழக அரசு உடனடியாக நல்ல தீர்வை காணவேண்டும் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கே‌ட்டு‌க்கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

இது தொடர்பாக அவ‌ர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவை மாவட்டத்தில் இயங்கி வரும் விசைத்தறி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மூலப்பொருட்கள ், இயந்திரங்களுக்கு தேவைப்படும் விலை 2 மடங்காக உயர்ந்துள்ளதாலும், இதர பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாலும், மின்சாரத் தடையாலும் இத்தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது.

இவர்கள் ஏற்கனவே பெற்ற கூலியும் மீட்டருக்கு 20 பைசா குறைந்துள்ளது. இன்றைய விலைவாசி உயர்ந்துள்ள சூழ்நிலையில் தொழிலையும் நடத்த முடியவில்லை. தங்களை நம்பியுள்ள தொழிலாளர்களுக்கும் வேலை தர முடியவில்லை. ஆகவே அவர்கள் கூலி உயர்வு கேட்டு போராடி வருகின்றனர்.

தற்போது தமிழக அரசு அமைச்சர்கள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தியும் பயனில்லை என்பது கவலைக்குரியதாகும். விசைத்தறி உரிமையாளர்கள், ஜவுளி உற்பத்தியாளர்கள், வேலை இழந்துவாடும் விசைத்தறி தொழிலாளர்கள் ஆகிய முத்தரப்பினர் நியாயங்களையும் உணர்ந்து ஒரு நல்ல தீர்வை தமிழக அரசு உடனடியாக காண வேண்டும ்" எ‌ன ்ற ு விஜயகாந்த் கூறியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

சிபில் ஸ்கோர் இல்லாமல் லோன்.. கோடிக்கணக்கில் மோசடி செய்தவர் தலைமறைவு..!

கணவனின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த மனைவி.. கள்ளக்காதல் காரணமா?

Show comments