Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தி.மு.க. மூழ்கும் கப்பலில் பயணம் செய்ய விரும்பு‌கிறது: என்.வரதராஜன்!

Webdunia
வெள்ளி, 22 ஆகஸ்ட் 2008 (10:37 IST)
காங்கிரஸ் எ‌ன்னும் மூழ்கும் கப்பலில் தி.மு.க. பயணம் செய்ய விரும்பினால் அது அவர்களது முடிவு எ‌ன்று மார்க்சிஸ்ட் கம்யூ‌னி‌ஸ்‌ட் கட்சி‌யி‌ன் மாநில செயலர் என்.வரதராஜன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

இது தொடர்பாக அவ‌ர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கூடங்குளத்தில் அமைந்துள்ள அணு மின் நிலையத்திற்கான ஒப்பந்தம் ஒன்றுபட்ட சோவியத் ய ூனியனோடு போடப்பட்ட ஒப்பந்தம். இந்த ஒப்பந்தத்தில் சர்வதேச அரசியல் நிபந்தனை ஏதும் இல்லை. அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான் கூடங்குளம் அணுமின் நிலையம் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.

இதற்கு தேவையான யுரேனியத்தையும் ர‌ஷ்யா நமக்கு வழங்க உள்ளது. இதற்கும் அமெரிக்காவோடு போடப்பட்டுள்ள 1,2,3 ஒப்பந்தத்திற்கும் சம்பந்தமில்லை.

அணுசக்தி ஒப்பந்தம் குறித்து இடதுசாரி கட்சிகள் எடுத்துள்ள நிலைப்பாட்டிற்கும் சீன அரசுக்கும் சம்பந்தம் இல்லை. சர்வதேச அணுசக்தி முகமையில் (ஐ.ஏ.இ.ஏ) சீன அரசு ஆதரித்துள்ளது. அணுசக்தி ஒப்பந்தம் குறித்து இடதுசாரி கட்சிகள் எடுத்துள்ள நிலைப்பாடு நாட்டு நலனை காக்கவே தவிர வேறு காரணத்திற்காக அல்ல. அணுசக்தி ஒ‌ப்ப‌ந்த‌த்தை எதிர்த்தவர்கள் எல்லாம் சீனாவோடு சேர்ந்து சதி செய்கிறார்கள் என்று அர்த்தம் ஆகுமா?

சேதுகால்வாய் திட்டத்தில் வகுப்புவாதிகளுக்கு எதிராக உறுதியான நிலை எடுக்காத காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில்தான் தி.மு.க. அமைச்சர்கள் உள்ளனர்.

காங்கிரசோடும், பா.ஜ.க.வோடும் உறவு கொண்டுள்ள கட்சிகளோடு மார்க்சிஸ்ட் கம ்ய ூனிஸ்டு கட்சி உறவு வைத்து கொள்ளாது என்ற நிலை எடுத்த பிறகு, இது குறித்து தி.மு.க. தலைமைதான் முடிவு செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம ்ய ூனிஸ்டு கட்சி தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ஆத்திரம் கொண்ட தி.மு.க. தலைமை மத்தியிலும், மாநிலத்திலும் காங்கிரசுடன் உள்ள தனது உறவை நியாயப்படுத்துவதற்கு இடதுசாரிகள் மீது அவதூறை பொழிகிறது.

தேசநலனுக்காக, இடதுசாரி கட்சிகள் நிற்கின்றன. இடதுசாரி கட்சிகளை புறக்கணித்துவிட்டு தேச நலனுக்கும் இந்திய இறையாண்மைக்கும் விரோதமாக, அமெரிக்க நலனுக்கு ஆதரவாக நிற்கும் காங்கிரசோடு இணைந்து நிற்கிறது தி.மு.க.

காங்கிரஸ் எனும் மூழ்கும் கப்பலில் தி.மு.க. பயணம் செய்ய விரும்பினால் அது அவர்களது முடிவு" எ‌ன்று வரதராஜ‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments