Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு பேருந்துகள் நாளை ஓடும்: கே.என்.நேரு!

Webdunia
செவ்வாய், 19 ஆகஸ்ட் 2008 (13:44 IST)
அரசு பேருந்துகள் நாளை வழ‌‌க்க‌ம் போ‌ல் ஓடும் எ‌ன்று த‌மிழக போ‌க்குவர‌த்து‌த் துறை அமை‌ச்ச‌ர் கே.எ‌ன். நேரு அற‌ி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துதல், 6-வது ஊதியக்குழு பரிந்துரைகளில் உள்ள பாதக அம்சங்களை போக்குதல், புதிய ஒய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய திட்டத்தைத் தொடருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இடதுசாரி ஆதரவு தொழிற்சங்கள் நாளை நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.

மத்திய அரசுக்கு எதிராக நாளை நடைபெறும் இ‌ந்த வேலைநிறுத்தத்தின் போது பேருந்து, லாரிகள் ஓடாது என்று சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

இ‌ந்‌நிலை‌யி‌ல் நாளை அரசு பேரு‌ந்துக‌ள் வழ‌க்க‌ம் போ‌ல் இய‌ங்கு‌ம் எ‌ன்று த‌மிழக அரசு அ‌றி‌வி‌த்து‌ள்ளது. இது தொட‌ர்பாக த‌மிழக அரசு இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், " நாளைய தினம் தொழிலாளர்கள் அகில இந்திய அளவில் நடத்தும் வேலை நிறுத்தத்திற்கு தார்மீக ஆதரவு உண்டு. ஆனால், வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதில்லை. எனவே, அரசு பேருந்துகள் நாளைய தினம் ஓடும்" எ‌ன்று அமை‌ச்ச‌ர் கே‌.எ‌ன். நேரு கூ‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

ஹாலிவுட்டை எரித்த காட்டுத்தீ! வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்!

சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.. திருப்பதி சம்பவம் குறித்து ரோஜா..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லையா? திமுக vs நாதக?

Show comments