Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊனமுற்ற அரசு ஊழியர்களு‌க்கு சலுகை: கருணாநிதி உத்தரவு!

Webdunia
செவ்வாய், 19 ஆகஸ்ட் 2008 (11:02 IST)
தமிழக அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பார்வையற்றோர ், உடல் ஊனமுற்றோர் அனைவரும் அலுவலக நேரம் முடிந்து பேரு‌ந்துகளில் நெரிசலில் சிக்காமல் பயணிப்பதற்கு வசதியாக, 15 நிமிடங்களுக்கு முன்னதாகவே அலுவலகத்தில் இருந்து புறப்பட்டுச் செல்லலாம் என்று முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டு‌ள்ள செய்திக்குறிப்பில ், " தமிழக அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பார்வையற்றோர், உடல் ஊனமுற்றோர் அனைவரும் அலுவலக நேரம் முடிந்து மாலையில் வீடு திரும்பும்போது கூட்ட நெரிசல் காரணமாக பேரு‌ந்துகளில் பயணம் செய்வதில் மிகுந்த இடர்பாடுகளுக்கு ஆளாகின்றனர்.

இதனா‌ல், பார்வையற்ற, உடல் ஊனமுற்ற அரசுப் பணியாளர்கள், பேரு‌ந்துகளில் நெரிசல் இன்றி ஏறி செல்வதற்கு வசதியாக, அவர்கள் தங்கள் அலுவலகப் பணி நேரம் முடிவதற்கு 15 நிமிடங்கள் முன்பாகவே அலுவலகத்தில் இருந்து புறப்பட்டுச் செல்வதற்கு அனுமதி வழங்கி முதலமைச்சர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்" எ‌ன்று கூறப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

ஹாலிவுட்டை எரித்த காட்டுத்தீ! வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்!

சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.. திருப்பதி சம்பவம் குறித்து ரோஜா..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லையா? திமுக vs நாதக?

Show comments