Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.20‌க்கு சா‌ப்பாடு வழ‌ங்க‌ப்படு‌கிறதா? க‌ண்கா‌ணி‌க்க அமை‌ச்ச‌ர் எ.வ.வேலு உ‌த்தரவு!

Webdunia
வியாழன், 14 ஆகஸ்ட் 2008 (18:34 IST)
'' உணவகங்களில் சிற்றுண்டியின் விலை 10லிருந்து 15 ‌விழு‌க்காட ு வரை குறைக்கப்பட்டுள்ளதா என்றும் 20 ரூப ா‌ ய ் மலிவு விலை சாப்பாடு தொடர்ந்து பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றதா எ‌ன்று‌ம் அ‌திகா‌ரிக‌ள் கண்காணிக்க வேண்டும்'' எ‌ன்று உணவு அமை‌ச்ச‌ர் எ.வ.வேலு உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளா‌ர்.

ச ெ‌ ன்ன ை தலைமைச் செயலகத்தில் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அலுவலர்களின் செயல்பாடுகள் குறித்து உணவ ு அமை‌ச்ச‌ர ் எ.வ. வேல ு இ‌ன்ற ு நடத ்‌ தினா‌ர். அ‌ப்போத ு அவ‌ர ் பேசுகை‌யி‌ல ், பொது விநியோகத் திட்டத்திற்கு தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்களும் அனைத்து நியாய விலை கடைகளுக்கும் அனுப்பப்பட்டும், விற்பனையாளர்கள் இருப்பு இல்லை என்று தெரிவிப்பதாக புகார்கள் பெறப்பட்டால் உடனடியாக அத்தகைய விற்பனையாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும ்.

பொது மக்களிடமிருந்து பெறப்படும் புகார்களை உடனுக்குடன் விசாரணை ச ெ‌ ய்த ு நடவடிக்கை எடுக்க வேண்டும். குடும்ப அட்டைதாரர்களுக்கு உரிய அளவில் பொருட்கள் வழங்க வேண்டும். 20 கிலோ அரிசி வழங்கப்படவேண்டிய குடும்ப அட்டைகளுக்கு அளவு குறைத்து வழங்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். நியாய விலைக் கடைகளில் இருப்பு இல்லை என்று புகார்கள் பெறப்பட்டால் சம்மந்தப்பட்ட அலுவலர்கள் மீதும் விற்பனையாளர்கள் மீதும் தக்க நடடிவக்கை எடுக்க வேண்டும் என்று
வலியுறுத்தினார்.

சிறப்பு பொது விநியோகத் திட்டத்தில் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயில், கோதுமை மாவு போன்ற பொருட்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கவும், இதை கண்காணிக்கவும் வலியுறுத்தினார். ஒவ்வொரு வட்டத்திலும் பொது மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டங்கள் நடைபெறும் போது பெறப்படும் புகார்களை உடனுக்குடன் தீர்வு ச ெ‌ ய்ய‌ப்ப ட வேண்டும். காலதாமதமின்றி புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்படவேண்டும் என்றும் கூறினார்.

புதிய குடும்ப அட்டைகளை விண்ணப்பித்த 60 நாட்களுக்குள் வழங்கப்படவேண்டும் என்றும் விலாசம் மாற்றம், பெயர் மாற்றம், மண்டல மாற்றம் மற்றும் பெயர் சேர்த்தல் / நீக்குதல் போன்றவைகள் காலதாமதமின்றி வழங்கப்பட வேண்டும் அல்லது உரிய பதில் அனுப்பப்படவேண்டும். இப்பணிகளை சரியாக ச ெ‌ ய்யாத அலுவலர்கள் கடமை தவறியவர்களாக கருதப்பட்டு ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் உதவி ஆணையாளருக்கு அமைச்சர் அறிவுரைகள் வழங்கினார்கள்.

போலி குடும்ப அட்டைகளாக இருக்கும் என்று கருதினால் முதலில் பொருள் நிறுத்த ஆணை பிறப்பிக்கப்பட்ட பின்னர் மேல் முறையீடு ச ெ‌ ய் ய வ ா‌ ய்ப்பளிக்கப்படுகிறது. மேல்முறையீட்டு அலுவலர்கள் மீண்டும் விசாரணை ச ெ‌ ய்த ு போலி குடும்ப அட்டை தான் என்று உறுதிபடுத்தினால் அத்தகைய குடும்ப அட்டைகள் ரத்து ச ெ‌ ய்யப்பட வேண்டும்.

உணவகங்களில் சிற்றுண்டியின் விலை 10லிருந்து 15 ‌விழு‌க்காட ு வரை குறைக்கப்பட்டுள்ளதா என்றும் 20 ரூப ா‌ ய ் மலிவு விலை சாப்பாடு தொடர்ந்து பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றதா என்பதையும் கண்காணிக்க வேண்டும் எ‌ன்ற ு அமை‌‌ச்ச‌ர ் அ‌றிவுறு‌த்‌தினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

ஹாலிவுட்டை எரித்த காட்டுத்தீ! வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்!

சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.. திருப்பதி சம்பவம் குறித்து ரோஜா..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லையா? திமுக vs நாதக?

Show comments