Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவர்கள் போரா‌ட்ட‌த்தை ஜனநாயக முறை‌யி‌ல் அரசு எ‌தி‌ர் கொ‌‌ள்ள வே‌ண்டு‌ம் : வரதராஜ‌ன்!

Webdunia
திங்கள், 11 ஆகஸ்ட் 2008 (11:16 IST)
'' தனியார் மயத்தை எதிர்த்து மாணவர்கள் போராடும் போது அதை ஜனநாயக முறையில் அரசு எதிர்கொள்ள வேண்டும ்'' எ‌ன்று மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் என்.வரதராஜன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் வெளியிட ்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், '' தஞ்சையில் செயல்பட்டு வரும், சாஸ்திரா நிகர்நிலை பல்கலைக்கழகம், தனியார் சட்டக் கல்லூரி தொடங்க உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளது. அதை கண்டித்து சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுத்து அந்த முயற்சியை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

இதுகுறித்து, போராட்டம் நடத்திய நெல்லை சட்டக் கல்லூரி மாணவர்கள் மீது காவ‌ல்துறை‌யின‌ர் தடியடி நடத்தியுள்ளனர். கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் ஆகியோர் கடுமையாக காயம் அடைந்துள்ளனர். கல்லூரிக்குள் புகுந்தும் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் 8 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர ்.

காவல் துறையின் இச்செயலை வன்மையாக கண்டிக்கிறோம். தனியார் மயத்தை எதிர்த்து மாணவர்கள் போராடும் போது அதை ஜனநாயக முறையில் அரசு எதிர்கொள்ள வேண்டும ்'' எ‌ன்று வரதராஜன் கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

ஹாலிவுட்டை எரித்த காட்டுத்தீ! வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்!

சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.. திருப்பதி சம்பவம் குறித்து ரோஜா..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லையா? திமுக vs நாதக?

Show comments