Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒகேன‌க்க‌ல்: க‌ர்நாடக முதலமை‌ச்ச‌ர் ‌மீது நடவடி‌க்கை எடு‌க்க வே‌‌‌ண்டு‌ம்- ஜ.மு.க. தீர்மானம்!

Webdunia
சனி, 9 ஆகஸ்ட் 2008 (14:30 IST)
ஒகேனக்கல் குடிநீர் விவகாரத்தில் இந்தியாவின் இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசி வரும் கர்நாடக முதலமை‌ச்ச‌ர், அமைச்சர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எ‌ன்று ஜனநாயக முன்னேற்ற கழகம் தீர்மானம் ‌நிறைவே‌ற்‌றியு‌ள்ளது.

ஜனநாயக முன்னேற்ற கழக நிறுவனத் தலைவர் ஜெகத்ரட்சகன் தலைமையில் நட‌ந்த மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்ட‌த்‌தி‌ல் ‌நிறைவே‌ற்ற‌ப்ப‌ட்ட ‌தீ‌ர்மான‌ங்க‌ள் ‌விவர‌ம் வருமாறு:

தண்ணீர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் தேசிய அளவில் நதிகள் இணைக்கப்பட வேண்டும்.

மீனவர்கள் ஓய்வெடுக்கும் இடமாகவும், மீன் வலையை உலர்த்தும் இடமாகவும், வழிபாட்டுத் தலமாகவும் விளங்கி வந்த 255 ஏக்கர் பரப்பளவுள்ள கட்சத் தீவு ‌சி‌றில‌ங்காவு‌க்கு அளிக்கப் பட்டிரு‌ப்பதை மீட்டு இந்தியாவிற்கே சொந்தமென அறிவிக்க வேண்டும்.

ஒகேனக்கல் குடிநீர் விவகாரத்தில் இந்தியாவின் இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசி வரும் கர்நாடக முதலமை‌ச்ச‌ர ் மீதும், அமைச்சர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சேது சமுத்திரத் திட்டம் ஏற்கனவே தொடங்கி வேலை நடந்து வரும் வழித்தடத்திலேயே நிறைவேற்றப்பட வேண்டும் உ‌ள்‌ளி‌ட்ட ‌தீ‌ர்மான‌ங்க‌ள் ‌நிறைவே‌ற்ற‌ப்ப‌‌ட்டன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

ஹாலிவுட்டை எரித்த காட்டுத்தீ! வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்!

சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.. திருப்பதி சம்பவம் குறித்து ரோஜா..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லையா? திமுக vs நாதக?

Show comments