Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்லூரிகளை பல்கலைக்கழகமாக்கு‌ம் முடிவை க‌ை‌விட வே‌ண்டு‌ம்: ராமதாஸ்!

Webdunia
சனி, 9 ஆகஸ்ட் 2008 (14:26 IST)
'' ஒருமைப் பல்கலைக்கழகமாக கல்லூரிகளை மாற்றினால், மேலும் மேலும் சுரண்டலுக்கு வழிவகுக்கும். அந்த முயற்சியை அரசு கைவிட வேண்ட ு‌ம்'' என்று ப ா.ம. க நிறுவனர் ராமதாஸ் கூ‌றியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், '' நியாயமான கோரிக்கைகள், உரிமைகளுக்காக போராடுவோர் மீது காவ‌ல்துறையை ஏவிவிட்டு அடக்கி ஒடுக்கும் போக்கு தலைதூக்கி வருகிறது. குறிப்பாக மாணவர்கள் மீது தடியடி நடத்தி அவர்கள் போராட்டத்தை நசுக்கும் போக்கு அதிகரித்துள்ளது.

கடந்த 2 நாட்களாக கோவை, நெல்லையில் கல்லூரி மாணவர்கள் மீது காவ‌ல்துறை‌யின‌ர் தடியடி நடத்தி உள்ளனர். அதற்கு பதில் மாணவர்களின் பிரதிநிதிகளை, சம்மந்தப்பட்ட அமைச்சர் அழைத்துப் பேசி நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வந்திருக்க வேண்டும்.

நீண்டகாலமாக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அரசு கல்லூரிகளை ஒருமைப் பல்கலைக்கழகம் என்று மாற்றி அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்துவிடவும், அரசின் நிதியுதவி பெற்று ஓரளவு அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் தனியார் கல்லூரிகளை முற்றிலுமாக தனியார் மயமாக்கவும் திமுக அரசு எடுத்துள்ள முடிவே, மாணவர்களின் போராட்டத்துக்கு காரணம்.

அரசின் இந்த முடிவால் சலுகைகள் பறிபோகும் என்று மாணவர்கள் அஞ்சுகின்றனர். அதேபோல உரிமைகள் பறிபோகும் என்றும் பேராசிரியர்கள் அஞ்சுகின்றனர். எனவே, தனியார்மய முயற்சியை அரசு கைவிட வேண்டும்.

என்ன விலை கொடுத்தாவது கல்வியை விலை கொடுத்து வாங்க நடுத்தர வர்க்கத்தினர் எல்லா முயற்சிகளிலும் ஈடுபடுகின்றனர். கல்விக் கட்டணம் செலுத்துவதற்காக சொத்துகளை அடகு வைக்கின்றனர். அதிக வட்டிக்கு கடன் வாங்குகின்றனர்.

கல்லூரிகளை ஒருமைப் பல்கலைக்கழகமாக மாற்றினால் மேலும் மேலும் சுரண்டலுக்கே வழிவகுக்கும். இந்த முயற்சியை அரசு கைவிட வேண்டும். மாணவர்களின் போராட்டத்துக்கு தீர்வு காண வேண்டும். அவர்கள் மீது ஏவிவிடும் அடக்குமுறை தீர்வுக்கு வழிவகுக்காது என்பதை உணர வேண்டும ்'' எ‌ன்று ராமதா‌ஸ் கூ‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

ஹாலிவுட்டை எரித்த காட்டுத்தீ! வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்!

சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.. திருப்பதி சம்பவம் குறித்து ரோஜா..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லையா? திமுக vs நாதக?

Show comments