Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் எம்.எல்.சி. அய்யணன் அம்பலம் மனைவிக்கு ஓய்வூதியம்: கருணா‌நி‌தி!

Webdunia
புதன், 6 ஆகஸ்ட் 2008 (13:55 IST)
தமிழ்நாடு சட்டமன்ற மேலவை முன்னாள் உறுப்பினர் அய்யணன் அம்பலம் மனைவி மகமாயி என்ற கருப்பாயிக்கு வா‌ழ்நா‌ள் முழுவது‌ம் ஓ‌ய்வூ‌திய‌ம் வழ‌ங்‌கி முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளா‌ர்.

வாழ்நாள் முழுவதும் மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணையினையும் 1.4.2007 முதல் 31.7.2008 வரையிலான ஓய்வூதியம் நிலுவைத் தொகை ரூ.48 ஆயிரத்துக்கான காசோலையை கரு‌ப்பா‌‌யி‌க்கு முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி இ‌ன்று நேரில் வழங்கினார். இந்த ஓய்வூதியம் மாதந் தோறும் ஓய்வூதியரின் வங்கி சேமிப்பு கணக்கில் நேரில் செலுத்தப்படும்.

ஓய்வூதியம் பெற்ற மகமாயி என்கிற கருப்பாயி தனது கணவர் அய்யணன் அம்பலம் 1970 முதல் 1976 வரை தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராக பணியாற்றியதை நினைவு கூர்ந்து, தனது நிதி நிலைமையை கருத்திற் கொண்டு தனக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கிய முதலமைச்சர் கருணாநிதிக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டார் எ‌ன்று த‌மிழக அரசு வெ‌ளி‌‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

ஹாலிவுட்டை எரித்த காட்டுத்தீ! வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்!

சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.. திருப்பதி சம்பவம் குறித்து ரோஜா..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லையா? திமுக vs நாதக?

Show comments