Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோபியில் ரூ.1.5 கோடியில் தானியங்கி பட்டு நூல் நூற்பு நிலையம்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

ஈரோடு செ‌‌ய்‌தியாள‌ர் வேலு‌‌ச்சா‌மி

Webdunia
புதன், 6 ஆகஸ்ட் 2008 (12:38 IST)
ஈரோடு மாவட்டம் கோபியில் ரூ.1.5 கோடி செலவில் தானியங்கி பட்ட ுந ூல் ந ூற்பு நிலையம் அமைக்கப்படும் என மத்திய இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.

இது குறித்து ஈரோட்டில் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் அவ‌ர் கூறுகை‌யி‌ல், ஈரோடு மாவட்டம் கோபி தொகுதியின் நாட ாளுமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றது முதல் இதுவரை சுமார் ரூ.7.5 கோடி மதிப்புள்ள திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்னும் ஆறு மாதங்களில் பலகோடி திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன.

பல இடங்களில் கூடுதல் பள்ளிகட்டிடம், சமுதாய கூடங்கள் என அனைத்து தரப்புக்கும் பயன்படுமாறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டது. கோபி பகுதியில் பட்டுபுழு விசவாயம் அதிகமாக உள்ளது. இதை கருத்தில் கொண்டு கோபியில் ரூ.1.5 கோடி செலவில் தானியங்கி பட்டு ந ு õல் ந ு õற்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது.

இதேபோல் கொடிவேரி அணை சீரமைக்கப்பட்டு சிறந்து சுற்றுலா தளமாக மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறேன். சத்திசாம்ராஜ்நகர் ரயில் திட்டத்திற்கு வனத்துறை அனுமதி வழங்கவில்லை. ரயில் வருவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் வனவிலங்குகளுக்கு எந்த விதத்தில் பாதிப்பு ஏற்படாது என்கிற உண்மைகளை கூறி ரயில் திட்டம் நிறைவேற அனுமதிவழங்குமாறு ரயில்வே அமைச்சகம் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்துள்ளது எ‌ன்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெரியாரின் நெஞ்சில் ஈட்டியை குத்தியிருக்கிறது திமுக அரசு! டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு..!

கடன் தொல்லை.. 3 மகன்களுக்கு விஷம் கொடுத்த தாய்.. தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்..!

பிரபல அப்பு பிரியாணி கடைக்கு சீல்.! பிரியாணி அண்டாக்களை சாலையில் போட்டு போராட்டம்..!!

மாதம் ரூ.2100 மகளிர் உதவித்தொகை வழங்கப்படும்: பாஜக தேர்தல் அறிக்கை..!

"குரூப்-4 பணியிடங்களை அதிகரிக்க வேண்டும்" - லட்சக்கணக்கான இளைஞர்களை வஞ்சிப்பதா.? இபிஎஸ் கண்டனம்..!!

Show comments