மாடுகள் மற்றும் குதிரைகளுக்கு புகழ்பெற்ற அந்தியூர் குருநாதசாமி கோவில் சந்தை நேற்று தொடங்கியது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் புதுப்பாளையத்தில ் உள்ளது குருநாதசாமி கோவில். இந்த கோவிலில் ஒவ்வொறு வருடமும் ஆடி மாத திருவிழா நடப்பது வழக்கம். இந்த விழாவை முன்னிட்டு இங்கு குதிரை மற்றும் ஆடு, மாடுகள் சந்தை கூடும். இந்த சந்தையில் விற்பனைக்காக தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்து குதிரை, மாடு மற்றும் ஆடுகள் கொண்டுவரப்படும்.
webdunia photo
WD
இங்கு வரும் குதிரைகள் ஒன்று ரூ. 6 லட்சம் வரை விற்பனையாகியுள்ளது. அதேபோல் மாடுகள் ஏர் உழவு செய்ய ஒரு ஜோடி ரூ.60 ஆயிரம் வரை விற்பனையாகி இருக்கிறது. இந்த வருடத்தின் ஆடி திருவிழா சந்தை நேற்று தொ டங்கி யது.
இதில் கோவை மாவட்டம் அவினாசி தாலுக்காவில் இருந்து தேசகுமார் என்பவரின் குதிரை தாளத்திற்கு தகுந்தாற்போல் நடனமாடி எல்லோரையும் கவர்ந்தது. இந்த குதிரை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கு ரூ.5.5 லட்சம் விலை நிர்ணயம் செய்துள்ளார் தேசகுமார். இதேபோல் மாடுகள் மற்றும் ஆடுகளும் அத ிகளவில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த சந்தை நான்கு நாட்கள் நடக்கிறது.