Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 தீவிரவாதிகளுக்கு 10 நாள் ‌விசாரணை காவ‌ல்!

Webdunia
சனி, 2 ஆகஸ்ட் 2008 (10:40 IST)
சுதந்‌திர‌த் ‌தின‌ம் அ‌ன்று செ‌ன்னை, ‌திருநெ‌ல்வே‌லியை வெடிகுண்டு வைத்து தகர்க்க சதி திட்டம் தீட்டியதாக கைது செய்யப்பட்ட 3 தீவிரவாதி களை 10 நா‌ள் ‌விசாரணை காவ‌லி‌ல் ‌விசா‌ரி‌க்க நெல்லை ‌ நீ‌திம‌ன்ற‌ம் அனும‌தி அ‌ளி‌த்து‌ள்ளது.

சுதந்திர தினத்தன்று தமிழகத்தின் பல இடங்களில் வெடிகுண்டு வைத்து தகர்க்க சதி திட்டம் தீட்டியதாக நெல்லை பேட்டையைச் சேர்ந்த தீவிரவாதி சேக் அப்துல்கபூர், ஹீரா ஆகியோரை காவ‌‌ல்துறை‌யின‌ர் கைது செய்து சிறையில் அடைத்தனர். சதிக்கு மூளையாக செயல்பட்ட சென்னை சிறையில் இருந்த தீவிரவாதி அலி அப்துல்லாவையும் இவ்வழக்கில் காவ‌ல்துறை‌யின‌‌ர் சேர்த்தனர்.

இவர்கள் 3 பேரும் நெல்லை குற்றவியல் ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் நீதிபதி செல்வம் முன்பு நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். அப்துல்கபூர், ஹீரா, அலிஅப்துல்லா ஆகியோரிடம் ‘உங்களை காவலில் எடுத்து விசாரணை நடத்துவதற்கு காவ‌ல்துறை‌யின‌ர் மனு செய்துள்ளனர். அதற்கு நீங்கள் என்ன கூறுகிறீர்கள்’ என்று நீதிபதி கே‌ட்டா‌ர்.

அ‌ப்போது மூன்று பேரும் ‌ விசாரணை காவலில் செல்ல விருப்பமில்லை எ‌ன்ற‌ன‌ர். இதையடு‌த்து நீதிபதி செல்வம், அப்துல்கபூர், ஹீரா, அலிஅப்துல்லா ஆகியோரை 10 நாட்கள் ‌‌ விசாரணை காவ‌ல் நடத்திட அனுமதி அளித்தார்.

அதோடு, 3 பேரையும் வெளியூரில் வைத்து விசாரணை நடத்த கூடாது எ‌ன்று‌ம் 2 நாட்களுக்கு ஒரு தடவை மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் எ‌‌ன்று ‌உ‌த்தர‌வி‌ட்ட ‌நீ‌திப‌தி, ஆக‌ஸ்‌ட் 11 ஆம் தேதி மாலை 5 மணிக்கு நீதிமன்றத்தில் மூன்று பேரையும் ஆஜர்படுத்திட வேண்டும் என‌்று உத்தரவிட்டார் ‌ நீ‌திப‌தி.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

ஹாலிவுட்டை எரித்த காட்டுத்தீ! வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்!

சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.. திருப்பதி சம்பவம் குறித்து ரோஜா..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லையா? திமுக vs நாதக?

Show comments