Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவிரியில் வெள்ள அபாயம்: கரையோர கிராமங்களுக்கு எச்சரிக்கை!

Webdunia
சனி, 2 ஆகஸ்ட் 2008 (12:43 IST)
கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் ஒகேனக்கல் வந்து சேர்ந்துள்ளது. நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், ஒகேனக்கல் காவிரியில் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வருவாய்த்துறையினர் தண்டோரா போட்டு எச்சரித்தனர்.

கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் தொடர்மழையால் அங்குள்ள கபினி, ஹேமாவதி, ஹேரங்கி, கிருஷ்ணராஜசாகர் உள்ளிட்ட அணைகளிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் மாலை விநாடிக்கு 18,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இரவில் மேலும் அதிகமானதால் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் தண்ணீர் சென்றது. தமிழகத்திற்கு வரும் காவிரிநீரை அளவிடும் பிலிகுண்டுலு பகுதியில் நேற்று காலை முதல் விநாடிக்கு 22,000 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது என்று அங்குள்ள மத்திய நீர்ஆணைய அலுவலர்கள் தெரிவித்தனர்.

இத‌ற்‌கிடை‌யி‌ல ் காவிரியில் அதிக தண்ணீர் வந்து கொண்டிருப்பதாலும், நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாலும் ஒகேனக்கல் காவிரி கரையோரமுள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வருவாய்த்துறையினர் நேற்று காலை தண்டோரா போட்டு எச்சரிக்கை செய்தனர்.

மேட்டூர் நீர்மட்டம் உயர்வ ு: கர்நாடகத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் மேட்டூர் அணைக்கு வந்து சேர்ந்துள்ளது.
இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.

நேற்று முன்தினம் மாலை 52.66 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று மாலை 53.76 அடியாக உயர்ந்தது. நேற்று மாலை மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 18,140 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து பாசனத்திற்காக விநாடிக்கு 11,960 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

இ‌ன்ற ு கால ை ‌ நிலவர‌ப்பட ி அணை‌க்க ு 23,137 கனஅட ி ‌ நீ‌ர ் வ‌ந்த ு கொ‌ண்டிரு‌க்‌கிறத ு. அணை‌யி‌ல ் இரு‌ந்த ு 12,094 ‌ நீ‌ர ் ‌ திற‌ந்த ு ‌ விட‌‌ப்படு‌கிறத ு.

டெ‌ல்ட ா பாசன‌த்‌தி‌ற்கா க கா‌வி‌ரி‌ ஆ‌ற்‌‌றி‌ல ் இரு‌ந்த ு 5,501 கனஅடியு‌ம ், வெ‌ன்னா‌ற்‌றி‌ல ் இரு‌ந்த ு 510 கனஅடியு‌ம ், க‌ல்லண ை கா‌ல்வா‌‌ய ் இரு‌ந்த ு 2,306 கனஅடியு‌ம ், கொ‌‌ள்‌ளிட‌ம ் கா‌ல்வா‌ய ் இரு‌ந்த ு 800 கனஅட ி ‌ நீ‌ரு‌ம ் ‌ திற‌ந்த ு ‌ விட‌ப்ப‌ட்டு‌கிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

ஹாலிவுட்டை எரித்த காட்டுத்தீ! வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்!

சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.. திருப்பதி சம்பவம் குறித்து ரோஜா..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லையா? திமுக vs நாதக?

Show comments