Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேலூர் மாநகராட்சி இ‌ன்று உதய‌ம்: கருணாநிதி தொடங்கி வைக்கிறார்!

Webdunia
வெள்ளி, 1 ஆகஸ்ட் 2008 (09:47 IST)
த‌மிழக ச‌ட்ட‌ப்பேரவை‌யி‌ல் அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டதை தொட‌ர்‌ந்து வேலூர் இ‌ன்று மாநகராட்ச ியாக மா‌ற்ற‌‌ப்படு‌கிறது. இதனை முதலமைச்சர் கருணாநிதி இன்ற ு மாலை தொடங்கி வைக்கிறார்.

வேலூ‌ர் கோ‌ட்டை மைதான‌த்‌தி‌ல் இ‌ன்று மாலை 5 மணிக்கு ‌ விழா நடைபெறுகிறத ு. மு தமைச்சர் கருணாநிதி கலந்துகொண்டு வேலூர் மாநகராட்சியைத் தொடங்கிவைத்துப் பேசுகிறார்.

வேலூர் மாநகராட்சியில் 76 உள்ளாட்சிகள் இடம் பெற்று உள்ளன. அவற்றின் மூலம் 9 லட்சத்து 7 ஆயிரம் மக்கள்தொகை கொண்டு 392 சதுர க ி.‌‌மீ பரப்பளவுடன் மாநகராட்சி உதயமாகிறது.

இ‌தே ‌விழா‌வி‌ல் ரூ.59 கோடியே 31 லட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழ‌ங்கு‌ம் முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி, ரூ.15 கோடியே 32 லட்சம் மதிப்பில், ஏற்கனவே நிறைவடைந்த வளர்ச்சித் திட்ட பணிகளுக்கும், ரூ.9 கோடி மதிப்பில் புதிதாக தொடங்கப்படும் வளர்ச்சி திட்ட பணிகளுக்கும் அமைக்கப்பட்ட கல்வெட்டுகளை திறந்து வைக்கிறார்.

விழாவுக்கு அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், மத்திய அமை‌ச்ச‌ர் ஆர்.வேலு ஆகியோர் முன்னிலை வகிக்கிறா‌ர்க‌ள்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments