Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டில் குண்டு வைக்கச் சதி: மேலும் இருவர் கைது!

Webdunia
திங்கள், 28 ஜூலை 2008 (16:57 IST)
சுதந்திரத ் தினத்தன்றோ அல்லது அதற்கு முன்னராகவோ சென்னை உட்பட தமிழகமெங்கும் உள்ள வழிபாட்டுத் தலங்களில் குண்டு வைக்க திட்டமிடப்பட்ட சதித் திட்டத்தில் தொடர்புடைய மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜிஹாத் கமிட்டி எனும் அமைப்பின் உறுப்பினர் அலி அப்துல்லாவே இந்த சதித்திட்டத்தின் மூளை என்றும், நெல்லையில் கைது செய்யப்பட்ட அப்துல் கஃபூரிடம் நடத்திய விசாரணையில் இது தெரியவந்துள்ளது என்றும் தமிழக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்ததாக யு.என்.ஐ. செய்தி கூறுகின்றது.

நேற்று இரவு கைது செய்யப்பட்ட அப்துல் கஃபூரிடம் நடத்திய விசாரணையை அடுத்து குண்டுகளை வெடிக்கச் செய்யும் மின் சுற்றை உருவாக்கும் திறமை கொண்ட மெஹமத் அன்வர் பாஷா என்பவரைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இவர்கள் இருவரிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவலையடுத்து, அவர்களின் கூட்டாளியாகச் செயல்பட்ட ஹூரா என்பவரை சென்னையில் இன்று கைது செய்துள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

இவர்கள் மூவரிடமும் நடத்திய விசாரணையில், வரும் ஆகஸ்ட் 15 சுதந்திரத ் தினத்தன்றோ அல்லது அதற்கு முன்னரோ சென்னை உட்பட தமிழகத்திலுள்ள வழிபாட்டுத் தலங்களில் குண்டுகள் வைக்க இவர்கள் சதித் திட்டம் தீட்டியிருந்தது தெரியவந்துள்ளதாக காவல் துறை தெரிவிக்கிறது.
காவல் துறையினரால் இந்த சதித் திட்டத்தின் மூளை என்று கூறப்படும் அலி அப்துல்லா ஒரு குண்டு வெடிப்பு மற்றும் சில கொலைகள் தொடர்பாக கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments