Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய அரசு நம்பிக்கையில் தோல்வி, வாக்கெடுப்பில் வெற்றி: இல.கணேசன்!

வேலு‌ச்சா‌மி

Webdunia
வெள்ளி, 25 ஜூலை 2008 (17:50 IST)
மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு நம்பிக்கையில் தோல்வியடைந்து வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளதாக பா.ஜ.க. மாநில தலைவர் இல. கணேசன் கூறினார்.

இது குறித்து ஈரோட்டில் அவ‌ர் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் கூறுகை‌யி‌ல், '' மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு நம்பிக்கையில் தோல்வியடைந்து வாக்கெடுப்பில் வெற்றிபெற்றுள்ளது. இது தார்மீக வெற்றி இல்லை. மத்திய அரசு இந்த வெற்றியை பெற என்ன நடவடிக்கை எடுத்தது என்பது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இம்மாதம் 28ஆம் தேதி ம ுதல் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை தமிழகம் ம ுழுவதும் பா.ஜ.க. சார்பில் பொதுக்கூட்டங்கள் மற்றும் த ெரும ுனை பிரச்சாரங்கள் நடத்தப்படும்.

உச்ச நீதிமன்றத்தில் ராமரே ராமர் பாலத்தை இடித்துவிட்டார் என கூறினர். இ த‌ன் ம ூலம் ராமர் பாலம் அமைத்தார் என்பதை அரசு ஒப்புக்கொண்டது. இதனால் த ி.மு. க. ம ுயற்சி தோல்வியடைந்து மாற்றுபாதை அமைக்க ஆராயவேண்டும் என உச்ச நீதிமன்றம் கூற ி யதை வரவேற்கிறோம்.

அண ு ச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ற்கு நாங்கள் எதிர்ப்பு தெ‌ர ிவிக்கவில்லை. இந்திய இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்பட்டால் எதிர்ப்பு த ெ‌‌‌‌ர ிவிப்போம். அணு ஆயுத ஆய்வு செய்ய விடமாட்டோம் என்றால் எதிர்ப்போம்.

ம ூன்றாவது அணிபற்றி எங்களுக்கு கவலையில்லை. ம ூன்றாவது அணி அமைக்கும் ம ுயற்சி ஏற்பட்டாலே காங்கிரஸ் கட்சி பலவீனமடைந்து விட்டது என அர்த்தம ்'' எ‌ன்று இல.கணேசன் கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments