Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணுசக்தி ஒப்பந்தத்துக்கு மக்கள் பிரதிநிதிகள் ஒ‌ப்புத‌ல்: தங்கபாலு!

Webdunia
புதன், 23 ஜூலை 2008 (16:12 IST)
'' ந‌ம்‌பி‌க்கை வா‌க்கெடு‌ப்‌பி‌ல் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங் அரசு வெ‌‌ற்‌றி பெ‌ற்றத‌ன் மூல‌ம் அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்‌த‌த்த‌ி‌ற்கு ம‌க்க‌ள் த‌ந்த அ‌ங்‌கீகாரமு‌ம், ஒ‌ப்புதலுமாகு‌ம்'' எ‌ன்று த‌மிழக கா‌ங்‌கிர‌ஸ் தலைவ‌ர் கே.‌வி.த‌ங்கபாலு கூ‌றியு‌ள்ளா‌‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெளியிட்டுள்ள அறிக்க ை‌யி‌ல், '' நாட்டின் ஜனநாயகத்திற்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்கும் வரலாறு போற்றும் வெற்றி கிடைத்துள்ளது.

சோனியா காந்தி வழிகாட்டுதலில் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அரசின் மீதுள்ள நம்பிக்கையை உறுதி செய்யும் வெற்றி என்பது மட்டுமல்ல நாட்டின் மின்சாரத் தேவையை நிறைவு செய்து பொருளாதார உயர்வுக்கும், மக்களின் எதிர்கால வாழ்வுக்கு வளமான வாய்ப்புள்ள இந்த அணு சக்தி ஒப்பந்தம் அவசியம் தேவை என்பதை இவ்வெற்றி மூலம் மக்கள் பிரதிநிதிகள் தந்த அங்கீகாரமும் ஒப்புதலுமாகும்.

மக்களின் ஏகோபித்த உணர்வுக்கும், எதிர்பார்ப்பிற்கும் கிடைத்த இவ்வெற்றிக்கு வாக்களித்த ஐக்கிய முற்போக்குகூட்டணியை சேர்ந்த குறிப் பாக தமிழகத்தை சேர்ந்த காங்கிரஸ், தி.மு.க., பா.ம.க. ஆகிய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், வெற்றிக்குறுதியாகவும், உறுதுணையாகவும் இருந்த தமிழக முதலமைச்சர் கருணாநிதிக்கும், ர ாமதாஸ் ஆகியோருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம ்'' எ‌ன்று த‌ங்கபாலு கூ‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

700 பெண்களின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள்.. அமெரிக்க மாடல் எனக் கூறியவர் கைது..!

கதிர் ஆனந்த் கல்லூரியில் அமலாக்கத்துறை சோதனை நிறைவு.. கைப்பற்றப்பட்ட பொருள்கள் என்ன?

தாம்பரம் - கடற்கரை இடையே புறநகர் ரயில் சேவை ரத்து: என்ன காரணம்?

டெல்லி சட்டமன்ற தேர்தல்: கெஜ்ரிவாலை எதிர்த்து போட்டியிடும் பாஜக வேட்பாளர் அறிவிப்பு..!

அண்ணா பல்கலை மாணவி விவகாரத்தில் உதயநிதி மெளனம் ஏன்? அண்ணாமலை கேள்வி

Show comments