Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செ‌ன்னை‌யி‌ல் மேலு‌ம் ஒருவ‌ர் எ‌ரி‌‌த்துக்கொலை!

Webdunia
வியாழன், 17 ஜூலை 2008 (13:14 IST)
செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று காவலா‌ளி ஒருவ‌ர் ம‌ர்மமான முறை‌யி‌ல் எ‌ரி‌த்து‌க் கொ‌ல்ல‌ப்ப‌ட்டா‌ர்.

செ‌ன்னை அடு‌த்த பூந்தமல்லி குமணன் சாவடியை சேர்ந்தவர் பாட்சா (50). அசோக்நக‌‌ரி‌ல் உள்ள ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் காவலாளியாக இரு‌ந்து வ‌ந்த இவ‌ர் இ‌ன்று காலை அ‌ங்கு தீயில் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார்.

காவலாளி பாட்சா கல்லால் தாக்கி மண்எ‌ண்ணெ‌ய் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

ஆனா‌ல் காவ‌ல்துறை‌யின‌ர் தர‌‌ப்‌பி‌ல், காவலா‌ளி பா‌ட்சா, அரு‌கி‌ல் வை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்த கொசுவ‌ர்‌த்‌தி மூல‌ம் ‌தீ பர‌வி எ‌ரி‌ந்‌திரு‌க்கலா‌ம் எ‌‌ன்று‌ம், அரு‌கி‌ல் மதுபான‌ங்க‌ள் ‌கிட‌ந்ததாக‌வு‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

காவலா‌ளி பா‌ட்சா உட‌ல் ‌பிரேத ப‌ரிசோதனை‌க்காக ராய‌ப்பே‌ட்டை அரசு மரு‌த்துவமனை‌க்கு அனு‌ப்‌பி வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இ‌ந்த ‌நி‌க‌ழ்வு கு‌றி‌‌த்து தகவ‌ல் அ‌றி‌ந்த காவ‌ல்துறை ஆணைய‌ர் சே‌க‌ர் ‌‌விரை‌ந்து வ‌ந்து ‌விசாரணை நட‌த்‌தினா‌ர்.

கட‌ந்த ‌சில நா‌ட்களாக வடபழனி, மேற்கு மாம்பலம், அசோக்நகர் பகுதிகளில் காவலாளிகள், பிச்சைக்காரர்களை மர்ம கொலையாளி கொலை செய்து வருகிறான்.

இந்த ‌நிக‌ழ்வுகளை தொடர்ந்து வடபழனி, பகுதியில் சுற்றித்திரிந்த மன நோயாளிகள், பிச்சைக்காரர்கள், பேப்பர் பொறுக்குபவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோரை காவ‌ல்துறை‌யின‌ர் பிடித்து விசாரித்தனர். அவர்களில் சந்தேகத்துக்கிடமான 40 பேரை தனி இடத்தில் வைத்து விசாரித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் அசோக்நகரில் ரியல் எஸ்டேட் காவலாளி எரித்துக் கொலை செய்யப்பட்டு‌ள்ளது பொதும‌க்க‌ள் இடையே அ‌ச்ச‌த்தை ஏ‌ற்படு‌‌த்‌தி உ‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments