Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராமேஸ்வரத்தில் 27ஆ‌ம் தே‌தி வைகோ உண்ணாவிரதம்!

Webdunia
வியாழன், 17 ஜூலை 2008 (10:09 IST)
‌'' சி‌ங ்கள அரசுக்கு துணைபோகும் துரோகத்தை செய்யும் மத்திய அரசை கண்டித்து வரு‌ம் 27ஆ‌ம் தேதி ராமேஸ்வரத்தில் என்னுடைய தலைமையில் உண்ணாநிலை அறப்போராட்டம் நடைபெறும ்'' எ‌ன்று ம.‌தி.மு.க. பொது‌ச் செயல‌ர் வைகோ கூற ியு‌ள்ளா‌ர ்

இது தொடர்பாக அவ‌ர் வெளியிட்டுள்ள அறிக்கையில ், ''‌சி‌றில‌ங்கா கடற்படையினரால் தமிழக மீனவர்கள் நமது கடல் எல்லையிலேயே தாக்கப்படுவதும், படுகொலை செய்யப்படுவதும் அன்றாட நிகழ்வாகிவிட்டது. நமது கடல் எல்லையிலேயே வந்து சிங்கள கடற்படையினர் குருவிகளை சுடுவது போல் தமிழக மீனவர்களை சுடுவதும், மீன்பிடி வலைகளை நாசப்படுத்துவதும் தொடர்ந்து நடைபெறுவதற்கு மத்திய அரசும் அதில் அங்கம் வகிக்கும் கட்சிகளும்தான் பொறுப்பேற்க வேண்டும்.

‌ சி‌றில‌ங்கா‌வி‌ல் தமிழ் இனத்தை பூண்டோடு அழிக்க திட்டமிட்டு இனப்படுகொலை செய்துவரும் சிங்கள அரசுக்கு இந்திய அரசு நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆயுதம் வழங்குதல் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் செய்வதால் தான் சிங்கள கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது துணிச்சலாக தாக்குதல் நடத்துகின்றனர். ‌ சி‌றில‌ங்கா கடற்படையினருக்கு நீர் மூழ்கி பயிற்சியும் இந்தியா தருவது தமிழக மீனவர்களுக்கும், தமிழ் இனத்துக்கும் இழைக்கப்படும் துரோகம் ஆகும்.

மத்திய அரசை எதிர்த்து மக்கள் சக்தியை திரட்ட வேண்டும் என்று முன்பே கூறியிருந்தேன். அதன் ஒருகட்டமாக, தமிழக மீனவர்களை படுகொலை செய்யும் ‌ சி‌றில‌‌ங்கா கடற்படையை தடுக்கும் கடமையை செய்யாததுடன், சிங்கள அரசுக்கு துணைபோகும் துரோகத்தை செய்யும் மத்திய அரசை கண்டித்து 27 ஆ‌ம் தேதி ராமேஸ்வரத்தில் என்னுடைய தலைமையில் உண்ணாநிலை அறப்போராட்டம் நடைபெறும ்'' எ‌ன்று வைகோ கூற ியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments