Webdunia - Bharat's app for daily news and videos

Install App

100 தொகுதியில் தனித்துப் போட்டி: திருமாவளவன்!

Webdunia
புதன், 16 ஜூலை 2008 (09:19 IST)
தமிழகத்தில் 100 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்டு வாக்கு வங்கியை நிர்ணயிக்க திட்டமிட்டுள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்ச ி தலைவர் தொல்.திருமாவளவன ் கூ‌றினா‌ர்.

தேனியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் பேசுகை‌யி‌ல், தமிழகத்தில் தி.மு.க.வுக்கு 24 ‌ விழு‌க்காடு வாக்கு வங்கி உள்ளது. அ.இ. அ.தி.மு.க.வுக்கு 24 முதல் 26 ‌ விழு‌க்காடு வாக்கு வங்கி உண்டு. காங்கிரஸ் கட்சிக்கு 6 முதல் 8 ‌ விழு‌க்காடு வாக்குகள் உண்டு.

ஆனால், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு கடலூர் மாவட்டத்தைத் தவிர மற்ற இடங்களில் நிலையான வாக்கு வங்கி கிடையாது.

இதனால் நிலையான வாக்கு வங்கியைப் பெற விடுதலைச் சிறுத்தைகள் 100 இடங்களிலாவது தனித்துப் போட்டியிட வேண்டும். அப்போதுதான் நிலையான வாக்கு வங்கியை நிர்ணயிக்க முடியும்.

2011- ல் தேர்தல் ஆணையத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு அங்கீகாரம் பெற வேண்டும். அப்போதுதான் கட்சிக்கு தனிச் சின்னம் கிடைக்கும். 2006 பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டிருந்தால் அங்கீகாரம் பெற்றிருக்க முடியும் எ‌ன்று ‌திருமாவளவ‌ன் கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments