Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாழை‌ப்பழ‌ம் வழ‌ங்கு‌ம் ‌தி‌ட்ட‌ம்: முத‌ல்வ‌ர் தொட‌‌ங்‌கி வை‌த்தா‌ர்!

Webdunia
செவ்வாய், 15 ஜூலை 2008 (14:59 IST)
சத்துணவுத் திட்டத்தில் முட்டை சாப்பிடாத குழந்தைகளுக்கு வாரத்திற்கு மூன்று நாள் வாழைப்பழம் வழங்கும் புதிய திட் ட‌‌த்தை முத‌லமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி இ‌ன்று தொட‌ங்‌கி வை‌த்தா‌ர்.

இ‌ந்த ‌தி‌ட்ட‌த்‌தி‌ன் மூல‌ம் 2 வயது முதல் 15 வயது வரையுள்ள 71 லட்சம் குழந்தைகளும், பள்ளி மாண வ- மாணவிகளும் பயன் பெற ுவ‌ர்.

சத்துணவில் ஏற்கனவே வேக வைத்த கொண்டைக் கடலை, பச்சைப்பயறு மற்றும் உருளைக் கிழங்கு ஆகியவைகளும் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது முட்டை சாப்பிடாத குழந்தைகள் பயன்பெறும் வகையில், இந்த ஆண்டின் கல்வி வளர்ச்சி நாளான இ‌ன்று முதல் சத்துணவில் முட்டை உட்கொள்ளாத குழந்தைகளுக்கும், மாண வ- மாணவிகளுக்கும் முட்டைக்கு மாற்று உணவாக வாழைப்பழம் வழங்கிட முதலமைச்சர் கருணா‌நி‌தி ஆணையிட்டுள்ளார்.

இத‌ன் படி, ஆண்டுக்கு ஒரு கோடியே 40 லட்சம் ரூப ா‌ய் கூடுதல் செலவில், சத்துணவுத் திட்டத்தில் முட்டை சாப்பிடாத 90,000 குழந்தைகள் மற்றும் மாண வ- மாணவியர்களுக்கு திங்கள், புதன் மற்றும் வியாழக் கிழமைகளில் வாழைப்பழம் வழங்கும் திட்டத்தை சென்னை, ஆயிரம் விளக்கு, மாதிரிப் பள்ளி சாலையில் அமைந்துள்ள மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாளான “கல்வி வளர்ச்சி நாள்” விழாவில் முதலமைச்சர் கலைஞர் இன்று தொடங்கி வைத்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments