Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு கேபிள் டி.வி. இன்று தொடக்கம்!

Webdunia
செவ்வாய், 15 ஜூலை 2008 (09:52 IST)
தஞ்சை உள்பட 4 மாவட்டங்களில் அரசு கேபிள் டி.வி. ஒளிபரப்பை முதலமைச்சர் கருணாநிதி இன்று தொடங்கி வைக்கிறார்.

தமிழகத்தின் பல இடங்களில் கேபிள் டி.வி.க்கான கட்டணம் அ‌திகமாக வசூலிக்கப்படுவதாக அரசுக்கு புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து மக்களின் வசதிக்காக கேபிள் டி.வி. இணைப்புகளை குறைந்த கட்டணத்தில் வழங்க முதலமைச்சர் கருணாநிதி உத்தரவின் பேரில் அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் உருவாக்கப்பட்டது.

இந்த கார்ப்பரேஷன் சார்பில் தஞ்சை, நெல்லை, கோவை, வேலூர் ஆகிய 4 ஊர்களில் கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டு பக்கத்து மாவட்டங்களுக்கு சிக்னல்கள் வழங்கப்படும்.

முதல் கட்டமாக தஞ்சையில் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சி ஆகிய 4 மாவட்ட தலைநகரங்களில் மட்டும் தொடக்கத்தில் இந்த மையத்தில் இருந்து இணைப்பு வழங்கப்பட்டு ஒளிபரப்பு தொடங்கப்படும். பிறகு இந்த 4 மாவட்டங்களின் அனைத்து பகுதிகளுக்கும் ஒளிபரப்பு தெரிவதற்கான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு கேபிள் டி.வி. ஒளிபரப்பு தஞ்சை மையத்தில் இருந்து இன்று தெ ாடங்குகிறது. முதலமைச்சர் கருணாநிதி சென்னை தலைமை‌ச் செயலக‌த்‌தி‌ல் இருந்து ஒளிபரப்பை தொடங்கி வைக்கிறார்.

தொடக்க விழா நிகழ்ச்சியை வீடியோ கான்பரன்சிங் மூலம் தஞ்சை மையத்தில் பார்க்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தஞ்சை மையத்தில் இதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

தஞ்சாவூரை தொடர்ந்து 10 நாட்களுக்கு பிறகு கோவையிலும், நெல்லையில் ஆகஸ்டு 15 ஆ‌ம் தேதியும், வேலூரில் அதற்கு பிறகும் அரசு கேபிள் டி.வி. தொடங்கப்படுகிறது. சென்னையில் செப்டம்பர் 15 ஆ‌ம் தேதி தொடங ்க‌ப்படு‌கிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments