Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ.டி.சி. நிறுவனம் மீது நடவடிக்கை‌: வரதரா‌ஜ‌ன்!

Webdunia
செவ்வாய், 15 ஜூலை 2008 (09:33 IST)
கோவை மாவட்டத்தில் குப்பைகளைக் கொட்டி நாசப்படுத்தி சட்டத்துக்கு புறம்பாக செயல்படும் ஐ.டி.சி. நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, கட்சியின் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன ் வெளியிட்ட அ‌றி‌க்கை‌யி‌ல், கோவை மாவட்டம் தேக்கம்பட்டி அருகே பேப்பர் மற்றும் பேப்பர் கப் தயாரிக்கும் கம்பெனியை, 2004-ம் ஆண்டு ஐ.டி.சி. நிறுவனம் தொடங்கியது.

இந்த நிறுவனம் பயன்படாத தாள்களை இறக்குமதி செய்கிறோம் எனக் கூறி, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளில் இருந்து குப்பைகளை இறக்குமதி செய்து வந்துள்ளது.

இதனை, 2005-ம் ஆண்டு தூத்துக்குடி துறைமுகத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதைத் தொடர்ந்தும், ஐ.டி.சி. நிறுவனம் தொடர்ந்து அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளில் இருந்து கழிவுகளை இறக்குமதி செய்து வருகிறது.

இந்த நிறுவனம் பவானி ஆற்றில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது. எனவே, சட்டத்துக்குப் புறம்பாக நடக்கும் ஐ.டி.சி. நிறுவனம் மீது மத்திய-மாநில அரசுகள் கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது அறிக்கையில் என்.வரதராஜன் கேட்டுக் கொண்டுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

700 பெண்களின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள்.. அமெரிக்க மாடல் எனக் கூறியவர் கைது..!

கதிர் ஆனந்த் கல்லூரியில் அமலாக்கத்துறை சோதனை நிறைவு.. கைப்பற்றப்பட்ட பொருள்கள் என்ன?

தாம்பரம் - கடற்கரை இடையே புறநகர் ரயில் சேவை ரத்து: என்ன காரணம்?

டெல்லி சட்டமன்ற தேர்தல்: கெஜ்ரிவாலை எதிர்த்து போட்டியிடும் பாஜக வேட்பாளர் அறிவிப்பு..!

அண்ணா பல்கலை மாணவி விவகாரத்தில் உதயநிதி மெளனம் ஏன்? அண்ணாமலை கேள்வி

Show comments