Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லாரி கவிழ்ந்த‌தி‌ல் மூன்று பெண்கள் பலி

ஈரோடு செ‌ய்‌தியாள‌ர்

Webdunia
திங்கள், 14 ஜூலை 2008 (17:26 IST)
ஈரோடு அருகே லாரி கவிழ்ந்து சாலையில் நடந்து சென்ற மூன்று பெண்கள் நசுங்கி இறந்தனர்.

webdunia photoWD
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வழியாக கர்நாடகா மாநிலத்தில் இருந்து நெல் உமி ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்தது. சத்தியமங்கலம் ஆத்துபாலத்தின் வடக்கு பகுதியில் தெற்குநோக்கி லாரி திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாக லாரி கவிழந்தது.

அந்த சமயத்தில் அந்த இடத்தில் சாலையின் ஓரமாக சென்ற மூன்று பெண்கள் லாரியின் அடியில் சிக்கி பரிதாபமாக இறந்தனர். ஜெ.சி.பி., இயந்திரம் மூலம் லாரியை அப்புறப்படுத்தினர். அந்த சமயத்தில் அருகே உள்ள கோயில் நந்தவனத்திற்குள் ஒரு குழந்தை அழும் குரல்கேட்டது. உடனே காவல்துறையினர் அப்பகுதியில் சென்று பார்த்தபோது சுமார் ஒரு வயது மதிக்கதக்க பெண் குழந்தை அழுதுகொண்டிருந்தது.

விபத்தில் பலியான ஒரு பெண்ணின் குழந்தை அது. விபத்து நடப்பது அறிந்தவுடன் அந்த தாய் தன் குழந்தையாவது உயிர்பிழைக்கட்டும் என நினைத்து தன் குழந்தையை வீசியுள்ளார் என்பது தெரியவந்தது.

இறந்த மூன்று பெண்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இச்சம்பவம் குறித்து சத்தியமங்கலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விதியின் விளையாட்டால் நடந்த இந்த சம்பத்தை பார்த்தபொதுமக்கள் கண்ணீர் வடித்து சென்றனர்.

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments