Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌மீனவ‌ர் நல‌ன்: ‌தி.மு.க. அர‌சி‌ற்கு ஜெயல‌லிதா கோ‌ரி‌க்கை!

Webdunia
ஞாயிறு, 13 ஜூலை 2008 (13:48 IST)
தமிழக மீனவர்களின் பிரச்சனையை தீர்க்க வேண்டிய கடமை மாநில அரசுக்கு உண்டு என்ற அடிப்படையில், மீனவர்களின் பிரச்சனை குறித்து உடனடியாக ‌சி‌றில‌ங்க அரசுடன் பேச்ச ு நடத்தி, இதுபோன்ற நிகழ்வுகள் இனி வருங்காலங்களில் நடைபெறாமல் இருப்பதற்கான ஓர் உத்தரவாதத்தை ‌சி‌றில‌ங்க அரசிடமிருந்து பெற்றுத்தர மத்திய அரசை தி.மு.க. அரச ு வற்புறுத்த வேண்டும் எ‌ன்று அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.

தமிழக மீனவர்கள் மீதான ‌சி‌றில‌ங்க‌க் கடற்படையினரின் தாக்குதல் தொடருமேயானால், பிரதான எதிர்க ் கட்சி என்ற முறையில், தமிழக மீனவர்களின் உரிமைகளை பெற்றுத்தர என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை எடுப்பதற்கான முய‌ற்‌சிக‌ளி‌ல் அ.இ.அ.தி.மு.க. தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் எ‌ன்று‌ம் அவ‌ர் தனது அறிக்கையில் எ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளா‌ர்.

‌ சி‌றி‌ல‌ங்க‌க் கடற்படையினரின் துப்பாக்கிச் சூடு காரணமாக இரண்டு மீனவர்கள் உயிரிழந்ததை அடுத்து வேதார‌ண்ய‌ம் பகுதியில் உள்ள மக்கள் அச்சத்தில் உள்ளதாக கு‌றி‌ப்‌பி‌ட்டு‌‌ள்ள அவ‌ர், மரணமடைந்த இரண்டு மீனவர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும், காயமடைந்த மீனவருக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் தி.மு.க. அரசை வலியுறுத்தியு‌ள்ளா‌ர்.

இறந்து போன மீனவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் முரளி விரைவில் பூரண குணமடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தி‌ப்பதாக ஜெயல‌லிதா தனது அ‌றி‌க்கை‌யி‌ல் கூ‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments