Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாநகரா‌ட்‌சி‌யி‌ல் 16 பேரு‌க்கு ப‌ணி ஆணை: மு.க.‌ஸ்டா‌லி‌ன் வழ‌ங்‌கினா‌‌ர்!

Webdunia
வெள்ளி, 11 ஜூலை 2008 (12:35 IST)
16 மாநகராட்சி நேரக்காப்பாளர்களுக்கு பணி நிரந்தர ஆணைகள் உள்ளாட்சித்துற ை அமைச்சர் மு.க.ஸ்டாலின் இ‌ன்று வழங்கினார ்.

சென்னை மாநகராட்சி இயந்திரப் பொறியியல் துறையில் 89 நாட்கள் தினக்கூலி அடிப்படையில் 12 ஆண்டுகளாக தற்காலிகமாக பணிபுரிந்து வரும் 16 நேரக்காப்பாளர்களுக்கு பணி நிரந்தர ஆணைகளை இன்று தலைமைச் செயலகத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழ‌ங்‌கினா‌ர். அவர் களு‌க்கு 2,650-65-3,300-70-4000 என்ற காலமுறை ஊதிய விகிதத்தில் பணி நிரந்தரம் ச ெ‌ய ்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே சென்னை மாநகராட்சியில் 81 ஆசிரியர் பணியிடங்கள், சுகாதாரத் துறையில் வேலை வ ா‌ய்‌ப்பு அலுவலகம் மூலம் 90 பணியிடங்கள் மருத்துவர், மருந்தாளுநர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. கருணை அடி‌ப்படை‌யி‌ல் 500 பே‌ரு‌க்கு பணி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

தினக்கூலி பணியாளர்கள், சாலைப் பணியாளர்கள், மலேரியா தூர்வாரும் பணியாளர்கள், மலேரியா பணியாளர்கள், மயான உதவியாளர்கள் 229 பே‌ரி‌ன் பணிகள் வரன்முறைப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோன்று 10 ஆண்டு காலம் தினக்கூலி தொழில் நுட்ப உதவியாளராக பணிபுரிந்த 48 பேரு‌க்கு காலமுறை ஊதியத்தில் பணியமர்த்தப்பட்டனர். சென்னை மாநகராட்சியில் பதவி உயர்வு மூலம் 1,123 காலிப்பணியிடங்களும் ‌ ந ிரப்பப்பட்டுள்ளன.

மேலும் சென்னை மாநகராட்சியில் தினக்கூலி அடிப்படையில் பணிபுரியும் 2,025 துப்புரவு பணியாளர்களும் அமைச்சர் கட‌ந்த மாத‌ம் 2ஆ‌ம் தே‌தி பணி நிரந்தர ஆணைகளை வழங்க ியு‌ள்ளா‌ர். கடந்த ஒன்றரை ஆ‌ண்டுக‌ளி‌ல் சென்னை மாநகராட்சியில் 1,981 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன எ‌ன்று த‌மிழக அரசு வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்த‌ி‌க்கு‌றி‌ப்‌பி‌ல் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புஷ்பா படத்தால் தான் மாணவர்கள் கெட்டு போனார்கள்: தலைமை ஆசிரியை வேதனை..!

தருமபுரி பட்டாசுக் கிடங்கு விபத்து: பலியான குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு.. அன்புமணி கோரிக்கை..!

ஒட்டுமொத்த ஐரோப்பிய மக்கள் தொகையை விட கும்பமேளாவில் நீராடியவர்கள் அதிகம்: பிரதமர் மோடி

திமுகவின் இரட்டை வேடம் இனியும் செல்லுபடியாகாது..! அண்ணாமலை

கொஞ்சம் இரக்கம் காட்டுங்கள்.. பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி கடிதம்..!

Show comments