Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜனவரி‌யி‌ல் சென்னைக்கு கட‌ல் ‌நீ‌ரி‌லி‌ரு‌ந்து குடிநீர்: மு.க.ஸ்டாலின்!

Webdunia
செவ்வாய், 8 ஜூலை 2008 (09:33 IST)
'' கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டப்பணிகள் முடிந்தவுடன ் ஜனவரி மாதத்தில் இருந்து சென்னை மக்களுக்கு குடிநீர் கிடைக்கும ்'' என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னையை அடுத்த மீஞ்சூர் அருகே உள்ள திருக்காட்டுப்பள்ளி கிராமத்தில், நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டப்பணிகளை உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

பின்னர் அவ‌ர் செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு அ‌ளி‌த்த பே‌ட்டி‌யி‌ல், '' நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்காக மீஞ்சூர் காட்டுப்பள்ளி கிராமத்தில் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டது. கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் இருந்து மாதவரம் மற்றும் செங்குன்றம் வரை குடிநீரை கொண்டு செல்லும் குழாயினை அமைக்கும் கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்திலிருந்து மாதவரம் நீரேற்று நிலையம் வரை குழாய் பதிக்கும் பணியில் மொத்தம் 23,257 மீட்டர் நீளத்தில், தற்போது 16,622 மீட்டர் நீளத்திற்கு ஆயிரம் மி.மீ. விட்டமுள்ள நெகிழ்வு விரும்புக் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் 80 ‌ விழு‌க்காடு முடிவடைந்து உள்ளது.

மாதவரம் நீரேற்று நிலையத்தில் இருந்து செங்குன்றம் வரை மொத்தம் 9,563 மீட்டர் நீளத்தில் இது நாள் வரையில் 9,007 மீட்டர் நீளத்திற்கு 900 மி.மீ. விட்டமுள்ள நெகிழ்விரும்புக் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது. தற்போது 85 வ‌ிழு‌க்காடு பணிகள் முடிவடைந்துள்ளது.

கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தை அமைக்கும் பணிகளில் குறிப்பாக கடலுக்கு அடியில் கடல்நீரை உள்கொணரும் குழாயினை பதிப்பதற்கான பணிகள் இரு பருவக்காலங்களுக்கிடையில், அதாவது செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் தான் மேற்கொள்ள முடியும். இந்த பணிகள் முடிந்து, ஆய்வு பணிகள் மேற்கொண்ட பிறகு, 2009-ம் ஆண்டு தொடக்கத்தில் அதாவது ஜனவரி மாதத்தில் இருந்து, இங்கிருந்து குடிநீர் வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகள் வேகமாக நடந்து வருகிறத ு'' எ‌ன்று மு.க.‌ஸ்டா‌லி‌ன் கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருச்சி சூர்யாவுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது: நீதிமன்றத்தில் அரசுதரப்பு பதில்..!

சென்னையில் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் விற்பனை: பெண் தலைமையிலான கும்பல் கைது!

சென்னை திரும்புகிறார் அண்ணாமலை.. வந்த மறுநாளே சென்னை, கோவையில் கட்சி கூட்டம்..!

ஈபிஎஸ் தொடுத்த மான நஷ்ட வழக்கு: ரூ.1.10 கோடி வழங்க தனபாலுக்கு நீதிமன்றம் உத்தரவு..!

நிதி நெருக்கடியால் திவால்.. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை கலைக்க உத்தரவு!

Show comments