Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீனவர்கள் காலவரையற்ற போராட்டம்!

Webdunia
வெள்ளி, 4 ஜூலை 2008 (11:15 IST)
சி‌றில‌ங்கா கடற்படையை கண்டித்தும் கச்சத்தீவு பகுதியில் நிரந்தரமாக மீன்பிடிக்கும் உரிமையை பெற்றுத்தர வலியுறுத்தியும் இன்று முதல் ராமே‌ஸ்வர‌ம் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுப‌ட்டு‌ள்ளன‌ர்.

ராமேசுவரத்தில் இருந்து 718 விசைப்படகுகளில் நேற்று முன்தினம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நே‌ற்று மு‌ன்‌தின‌ம் க‌ச்ச‌‌தீவு அருகே கட‌லி‌ல் மீன்பிடி‌த்து‌க் கொ‌ண்டிரு‌ந்தன‌ர். அப்போது அ‌ங்கு வ‌ந்த ‌சி‌றில‌ங்கா கடற்படையினர் துப்பாக்கியால் வானத்தை நோக்கியும், மீனவர்களின் படகை நோக்கியும் சு‌ட்டனர்.

அவர்களிடம் இருந்து தப்பிக்க முய‌ன்ற 300 ‌மீனவ‌ர்க‌ளி‌ன் படகுகளை ‌சி‌றில‌ங்கா கடற்படையினர் சுற்றி வளைத்தனர். இ‌ந்த படகுக‌ளி‌ல் 1,024 பே‌ர் இருந்தனர். பின்னர் அவர்களை, படகுகளுடன் துப்பாக்கி முனையில் தலைமன்னார், நெடுந்தீவு பகுதிக்கு ‌சி‌றில‌ங்கா கடற்படையினர் கடத்திச் சென்றனர்.

இரவு 9 மணி வரை படகில் சோதனை நடத்தி மீனவர்களை தாக்கிய ‌சி‌றில‌ங்கா கடற்படையினர் ஒவ்வொரு படகாக ராமேசுவரத்திற்கு செல்லும்படி அனுப்பினர். விடிய விடிய பயணம் செய்த மீனவர்களின் படகுகள் நேற்று காலை முதல் ஒவ்வொன்றாக கரை திரும்ப தொடங்கின.

‌ சி‌றில‌ங்கா கடற்படையினரை கண்டித்து நேற்று ராமே‌ஸ்வர‌த்‌தி‌ல் அனைத்து மீனவர் சங்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மீனவர் சங்க தலைவர்கள் அந்தோணி, போஸ், மகத்துவம் ஆகியோர் தலைமை தாங்கினர்.

‌ பி‌ன்ன‌ர் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான‌த்‌தி‌ல், ‌சி‌றில‌ங்கா கடற்படையினரின் நடவடிக்கையால் மீன்பிடி தொழில் அழிந்து விடும் அபாய நிலைக்கு வந்து விட்டது. எனவே மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்க போராடுவதை தவிர வேறு வழியில்லை.

ஆகவே ‌சி‌றில‌ங்கா கடற்படையை கண்டித்தும் கச்சத்தீவு பகுதியில் நிரந்தரமாக மீன்பிடிக்கும் உரிமையை பெற்றுத்தர வலியுறுத்தியும் இன்று (4ஆ‌ம் தே‌தி) முதல் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது, 10ஆ‌ம் தேதி பாம்பன் சாலை பாலத்தில் மறியல் போராட்டம் நடத்துவது எ‌ன்று முடிவு செ‌ய்ய‌ப்‌ப‌ட்டது.

‌ மீனவ‌ர்க‌ளி‌ன் போரா‌ட்ட‌ம் அ‌றி‌வி‌‌ப்பை தொட‌‌ர்‌ந்து ஏராளமான ‌விசை‌‌ப்படகு‌க‌ள் கரை‌யி‌ல் ‌நிறு‌த்த‌ப்‌ப‌ட்டு‌ள்ளது. ‌மீனவ‌ர்க‌ளி‌ன் வேலை ‌நிறு‌த்த‌த்தா‌ல் ராமே‌ஸ்வர‌ம் பகு‌தி வெ‌றி‌ச்சோடி காண‌ப்படு‌கிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கலுக்கு ஊருக்கு போறீங்களா? கவலை வேண்டாம்! 14,104 சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு!

இந்தியாவில் 2 குழந்தைகளுக்கு எச்.எம்.பி.வி வைரஸ் பரவியது: ஐ.சி.எம்.ஆர் உறுதி..!

சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஏன் வெளியேறினார்? சபாநாயகர் அப்பாவு விளக்கம்..!

48 வருஷத்துல இப்படி நடந்தது இல்ல.. சீமான் கண்ணியம் தவறிவிட்டார்! - பபாசி தலைவர் கருத்து!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு: கைதான 18 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து..!

Show comments