Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கன மழை: வடமாநிலங்களுக்கு 24 ரயில்கள் ரத்து!

Webdunia
வியாழன், 3 ஜூலை 2008 (11:50 IST)
பலத்த மழை காரணமாக சென்னை வழியாக வடமாநிலங்களுக்கு இயக்கப்படும் 24 ரயில்கள் 2-வது நாளாக ரத்து செய்யப்பட்டுள்ள ன எ‌ன்று தெ‌ற்கு ர‌யி‌‌ல்வே தெ‌ரிவ‌ி‌த்து‌ள்ளது.

தென்கிழக்கு ரயில்வேக்கு உட்பட்ட கொரக்பூர் கோட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு வாகன போக்குவரத்து மற்றும் ரயில் போக்குவரத்து முற்றிலுமாக தடைப்பட்டுள்ளது.

சில இடங்களில் ரயில்வே தண்டவாளங்கள் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை வழியாக அந்த வடமாநிலங்களுக்கு இயக்கப்படும் ரயில்கள் 2-வது நாளாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

இது கு‌றி‌த்து தெ‌ற்கு ர‌யி‌ல்வே வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், சென்னை சென்டிரலில் இருந்து அவுராவுக்கு காலை 8.45 மணிக்கு இயக்கப்படும் கோரமண்டல் ‌ விரைவு ர‌யி‌ல் ( வ.எண்.2842) 6 ஆ‌ம் தேதி முதல் 12‌ ஆ‌ம் தேதி வரையும். அவுராவில் இருந்து சென்னைக்கு மாலை 5.15 மணிக்கு இயக்கப்படும் கோரமண்டல் விரைவ ு ர‌யி‌ல் (2841) 5 ஆ‌‌ம் தேதி முதல் 11 ஆ‌ம் தேதி வரையும். சாலிமரில் இருந்து காட்பாடி வழியாக காலை 5.52 மணிக்கு நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் ரயில் (2660) 11 ஆ‌ம் தேதியும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதே போல் நாகர்கோவிலில் இருந்து சென்னை வழியாக மதியம் 2.35 மணிக்கு சாலிமருக்கு இயக்கப்படும் ரயில் (2659) 6 ஆ‌ம் தேதியும். திருவனந்தபுரத்தில் இருந்து சென்டிரல் வழியாக காலை 9.55 மணிக்கு சாலிமருக்கு இயக்கப்படும் ரயில் (6323) 4, 6, 11 ஆ‌ம் தேதிகளிலும், சாலிமரில் இருந்து சென்னை வழியாக காலை 4.15 மணிக்கு திருவனந்தபுரத்திற்கு இயக்கப்படும் ரயில் (6324) 3, 7, 10 ஆ‌ம் தேதியும்,

அவுராவில் இருந்து எழும்பூர் வழியாக இரவு 8.25 மணிக்கு கன்னியாகுமரிக்கு இயக்கப்படும் ரயில் (2665) 8 ஆ‌ம் தேதியும், கன்னியாகுமரியில் இருந்து எழும்பூர் வழியாக காலை 7.50 மணிக்கு அவுராவுக்கு இயக்கப்படும் ரயில் (2666) 5 ஆ‌ம் தேதியும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அவுராவில் இருந்து எழும்பூர் வழியாக இரவு 8.25 மணிக்கு திருச்சிக்கு இயக்கப்படும் ரயில் (2663) 7, 11 ஆ‌ம் தேதிகளிலும், திருச்சியில் இருந்து எழும்பூர் வழியாக இரவு 10.30 மணிக்கு அவுராவுக்கு இயக்கப்படும் ரயில் (2664) 4, 8 ஆ‌ம் தேதிகளிலும், கவுகாத்தியில் இருந்து சென்டிரல் வழியாக காலை 4.50 மணிக்கு பெங்களூருக்கு வாரம் மும்முறை இயக்கப்படும் ரயில் (2510), 8 ஆ‌ம் தேதி முதல் 10 ஆ‌ம் தேதி வரையும்,

பெங்களூரில் இருந்து சென்டிரல் வழியாக காலை 6.30 மணிக்கு கவுகாத்திக்கு இயக்கப்படும் ரயில் (2509) 5, 10, 11 ஆ‌ம் தேதிகளிலும், திருவனந்தபுரத்தில் இருந்து சென்டிரல் வழியாக காலை 6.30 மணிக்கு கவுகாத்திக்கு இயக்கப்படும் ரெயில் (2515) 7 ஆ‌‌ம் தேதியும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதே போல் சென்னை வழியாக வடமாநிலங்களுக்கு இயக்கப்படும் 24 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன எ‌ன்று தெற்கு ரயில்வே தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments