Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டீசலை பதுக்கினால் பங்க் உரிமம் ரத்து: தமிழக அரசு எச்சரிக்கை!

Webdunia
புதன், 2 ஜூலை 2008 (11:43 IST)
'' பெட்ரோல், டீசலை பதுக்கினால் பெட்ரோல் விற்பனை நிலையங்களின ் உரிமம் ரத்து செய்யப்படும ்'' என்று தலைமைச் செயலாளர் எல்.கே. திரிபாதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

செ‌ன்னை‌யி‌‌ல் நே‌ற்று அவ‌ர் செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு அ‌ளி‌த்த பே‌ட்டி‌யி‌ல், பெட்ரோல், டீசலை பதுக்கினாலோ, உயர்ரக பெட்ரோலை மட்டும் விற்பனை செய்தாலோ அந்த பெட்ரோல் விற்பனை நிலையங்களின் உரிமம் ரத்து செய்யப்படும். அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களில் உணவு வழங்கல் மற்றும் வணிக வரித்துறை அதிகாரிகள் நே‌ற்‌ற ிரவு சோதனை நடத்தினார்கள். அதில், பெரும்பாலான பெட்ரோல் விற்பனை நிலையங்களில் பிரீமியம் வகை பெட்ரோல், டீசல் மட்டுமே விற்கப்படுவது கண்டறியப்பட்டது. அனைத்து வகை பெட்ரோல், டீசலையும் விற்க வேண்டும் என்று பங்க் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு அது பெரிய பிரச்னையாக உருவெடுத்திருப்பது உண்மைதான். இந்தத் தட்டுப்பாடு தாற்காலிகமானது. 30,000 கிலோ லிட்டர் பெட்ரோல், டீசல் கப்பல் மூலம் சென்னைக்கு வந்து கொண்டிருக்கிறது. இந்த நடவடிக்கைகளால் நிலைமை சீராகும் எ‌ன்றா‌ர் ‌தி‌ரிபா‌தி.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments