Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேலை ‌நிறு‌த்த‌ம்: பெட்ரோல், டீசல் டேங்கர் லாரிகள் ஓடு‌கிறது!

Webdunia
புதன், 2 ஜூலை 2008 (11:39 IST)
லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் பெட்ரோல், டீசல் டேங்கர் லாரிகள் கலந்து கொள்ளவில்லை.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லா‌ரி உ‌ரிமையாள‌ர்க‌ள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வேலை நிறுத்த போரா‌ட்ட‌த்த‌ி‌ல் பெட்ரோல், டீசல் ஏற்றிச் செல்லும் டேங்கர் லாரிகள் கலந்து கொள்ளாது என்று சென்னை டேங்கர் லாரிகள் சங் க‌ம் அ‌றி‌த்து‌ள்ளது.

இது கு‌றி‌த்து அ‌‌ச்ச‌ங்க‌த்‌தி‌ன் நிர்வாகிகள் துரை, வரதராஜன், வேலு ஆகியோர் கூறுகை‌யி‌ல், ச ென்னையில் தற்போது பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் லாரிகள் வேலை நிறுத்தத்தில் நாங்களும் கலந்து கொண்டால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.

எனவே, பொதுமக்களின் நலன் கருதி எங்கள் சங்கத்தில் உள்ள ஆயிரம் டேங்கர் லாரிகள் இந்த வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாது எ‌ன்றன‌ர்.

ட ேங்கர் லாரிகள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாததால் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை என்றும், தமிழ்நாடு முழுவதும் அவற்றின் வினியோகம் தடை இன்றி நடைபெறும் என்றும் எண ்ணெ‌ய் நிறுவன அதிகாரி ஒருவர் கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறுமி வன்கொடுமை, கொலை! கும்பமேளா சென்ற குற்றவாளி! சேஸ் செய்து பிடித்த போலீஸ்!

வெளிமாநிலத்தவர்கள் நிலம் வாங்க தடை.. உத்தரகாண்ட் மாநிலத்தில் புதிய சட்டம்..!

உதயநிதி சரியான ஆளாக இருந்தால் "Get Out Modi" என்று சொல்லி பார்க்கட்டும்: அண்ணாமலை

அண்ணாமலைக்கு தில் இருந்தா அண்ணாசாலைக்கு வர சொல்லுங்க! - உதயநிதி ஸ்டாலின் சவால்!

இந்தியாவில் டெஸ்லா ஆலை அமைக்க டிரம்ப் எதிர்ப்பு.. முதல் முறையாக கருத்து வேறுபாடா?

Show comments