Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொட‌ர் மழையா‌ல் வடமாநில ரயில்கள் ‌மீ‌ண்‌டு‌ம் ரத்து!

Webdunia
சனி, 28 ஜூன் 2008 (09:57 IST)
வட மா‌நில‌ங்க‌ளி‌ல் பெ‌ய்து வரு‌ம் பலத்த மழை காரணமா க சென்னை வழியாக வடமாநிலங்களுக்கு இயக்கப்படும் 6 ரயில்கள் மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கடந்த 20 நாட்களாக வடமாநிலங்களான கொல்கத்தா, ஒரிசா போன்ற பகுதிகளில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. வாகன‌ம், ரயில் போக்குவரத்து அடியோடு துண்டிக்கப்பட்டுள்ளது. ரயில்வே தண்டவாளங்கள் கடுமையாக பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன.

இதனால், சென்னை வழியாக வடமாநிலங்களுக்கு இயக்கப்படும் 30க்கும் மேற்பட்ட ரயில்கள் ஜூலை 2ஆ‌ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் வடமாநிலங்களுக்கு இயக்கப்படும் மேலு‌ம் 6 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இது தொட‌ர்பாக தெ‌ற்கு ர‌‌யி‌ல்வே வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், ‌திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை வழியாக காலை 9.55 மணிக்கு, சாலிமருக்கு இயக்கப்படும் ‌விரைவு ரயில் (வ.எண். 6323) 29ஆ‌ம் தேதியும். சாலிமரில் இருந்து சென்‌ட்ரல் வழியாக காலை 4.15 மணிக்கு திருவனந்தபுரத்திற்கு 3ஆ‌ம் தேதி இயக்கப்படும் திருவனந்தபுரம் விரைவு ரயில் (6324), நாகர்கோவிலில் இருந்து காட்பாடி வழியாக காலை 7.20 மணிக்கு அவுராவுக்கு (கொல்கத்தா) 30ஆ‌ம் தே‌தி இயக்கப்படும் குருதேவ் விரைவு ரயில் (2659), சாலிமரில் இருந்து காட்பாடி வழியாக காலை 5.37 மணிக்கு நாகர்கோவிலுக்கு 4ஆ‌ம் தேதி இயக்கப்படும் குருதேவ் விரைவு ரயில் (2660) ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னை எழும்பூரில் இருந்து இரவு 10.30 மணிக்கு, கவுகாத்திக்கு 30ஆ‌ம் தேதி இயக்கப்படும் விரைவு ரயில் (5629), திருவனந்தபுரத்தில் சென்னை வழியாக காலை 6.30 மணிக்கு கவுகாத்திக்கு 30ஆ‌ம் தேதி இயக்கப்படும் விரைவு ரயில் (2515) ஆகிய 6 ரயில்கள் மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளன எ‌ன்று கூறப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறுமி வன்கொடுமை, கொலை! கும்பமேளா சென்ற குற்றவாளி! சேஸ் செய்து பிடித்த போலீஸ்!

வெளிமாநிலத்தவர்கள் நிலம் வாங்க தடை.. உத்தரகாண்ட் மாநிலத்தில் புதிய சட்டம்..!

உதயநிதி சரியான ஆளாக இருந்தால் "Get Out Modi" என்று சொல்லி பார்க்கட்டும்: அண்ணாமலை

அண்ணாமலைக்கு தில் இருந்தா அண்ணாசாலைக்கு வர சொல்லுங்க! - உதயநிதி ஸ்டாலின் சவால்!

இந்தியாவில் டெஸ்லா ஆலை அமைக்க டிரம்ப் எதிர்ப்பு.. முதல் முறையாக கருத்து வேறுபாடா?

Show comments