Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10ஆ‌ம் வகுப்பு சிறப்புத் தேர்வு: விண்ணப்பிக்க 24ஆம் தேதி கடைசி!

Webdunia
வியாழன், 19 ஜூன் 2008 (13:35 IST)
ஜூலையில் நடைபெற உள்ள 10ஆம் வகுப்பு உடனடி அனுமதி திட்ட சிறப்புத் துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜூன் 24ஆம் தேதி கடைசி நாளாகும். அதிகபட்சமாக 3 பாடங்கள் வரை தேர்ச்சி பெறாதவர்கள் மட்டுமே உடனடி அனுமதித் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.

இதற்கு விண்ணப்பிக்கும் தனித்தேர்வர்கள் உரிய தேர்வுக் கட்டணத்துடன் கூடுதலாக ரூ.500 சிறப்பு ஒதுக்கீட்டுக் கட்டணத்தை, "அரசுத் தேர்வுகள் இயக்குநர், சென்னை-6' என்ற பெயரில் வங்கி வரைவோலையாக செலுத்த வேண்டும்.

10 ஆ‌ம் வகு‌ப்பு மாணவர்களுக்கு ஒன்று முதல் மூன்று பாடங்களுக்கான கட்டணம் ரூ.625. மெட்ரிக் பள்ளி மாணவர்கள் ஒரு பாடத்துக்கு ரூ. 635ம், இரு பாடங்களுக்கு ரூ.735ம், 3 பாடங்களுக்கு ரூ.835ம் செலுத்த வேண்டும்.

ஆங்கிலோ இந்தியன் பள்ளி மாணவர்கள் ஒரு பாடத்துக்கு ரூ.585ம், இரு பாடங்களுக்கு ரூ.635ம், 3 பாடங்களுக்கு ரூ. 685ம் செலுத்த வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூன் 24ஆம் தேதிக்குள் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககம், மதுரை, கோவை, நெல்லை, திருச்சி, கடலூர், வேலூர் மண்டல அலுவலகங்களில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்வுத்துறை இயக்குநர் வசந்தி ஜீவானந்தம் தெரிவித்துள்ளார்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments