Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விலைவாசி உயர்‌வு ‌பிர‌ச்சனை‌யி‌ல் கம்யூனிஸ்டுகள் நாடகமாடுகின்றன: வைகோ!

Webdunia
வியாழன், 19 ஜூன் 2008 (10:52 IST)
'' விலைவாசி உயர்வு பிரச்சினையில் கம ்ய ூனிஸ்டு கட்சிகள் திட்டமிட்டு நாடகமாடுகின்ற ன'' என்று ம.‌தி.மு.க. பொது‌ச் செயலாள‌ர் வைகோ குற் ற‌ம்சா‌ற்‌‌றியு‌ள்ளா‌ர்.

செ‌ன்னை ‌தீவு‌த்‌திட‌லி‌ல் நட‌ந்த ம.தி.மு.க.வின் மண்டல மாந ா‌ட்டி‌ல் அ‌க்க‌ட்‌சி‌யி‌ன் பொது‌‌ச் செயலாள‌ர் வைகோ பேசுகை‌யி‌ல், அமெரிக்காவில் நீக்ரோ இனத்தவர் வெள்ளைமாளிகையின் ஜனாதிபதியாக வருவார் என்று காஞ்சி இதழில் 11 வாரங்களாக அண்ணா எழுதினார். 6 வருடங்களுக்கு முன்பு ஒபாமா கூட்டிய பத்திரிகையாளர் சந்திப்புக்கு 4 பேர் கூட வரவில்லை. இன்று உலகம் முழுவதும் அவர் உதடு அசைவதற்காக காத்து கிடக்கிறார்கள்.

நாமும் சாதிக்க முடியும். ஈழத்தமிழர்களை விடுதலை அடைய செய்ய முடியும். கச்சத்தீவை மீட்க முடியும். தமிழக மீனவர்களுக்கு எதிரான துப்பாக்கி சூட்டை தடுக்க முடியும். சாதி சமயமற்ற சமுதாயத்தை உருவாக்க முடியும். நதிகளை இணைக்க முடியும். உழவர்கள் கண்ணீர் சிந்தாமல் தடுக்க முடியும்.

விலைவாசி சொல்ல முடியாத அளவுக்கு உயர்ந்து விட்டது. விலைவாசியை உயர்த்தினால், ஆதரவை வாபஸ் வாங்குவோம் என்று கம ்ய ூனிஸ்டு கட்சிகள் ஏன் சொல்லவில்லை. ஆதரவை வாபஸ் வாங்குவோம் என்று கூறியிருந்தால் விலைவாசி உயர்ந்திருக்காது. பெட்ரோல், டீசல் விலையையும் உயர்த்தி இருக்க மாட்டார்கள். கம ்ய ூனிஸ்டு கட்சிகள் திட்டமிட்டு நாடகமாடுகிறார்கள் எ‌ன்று வைகோ கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments